மின்கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் நீர்மின்னுற்பத்தியில் சாதகமான நிலை காணப்படுகிறது.

ஆகவே அதன் பயனை மின்பாவனையாளர்களுக்கு வழங்குவோம் என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நந்திக பதிரகே தெரிவித்தார்.

மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காகவே கடந்த ஆண்டு இரண்டு முறை மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டன.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மின்னுற்பத்தி தொடர்பான செலவுகள் குறித்த விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைப்போம் என்றார்.

இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நந்திக பதிரகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply