முகத்தில் இறுக்கம்.. பாதியில் உரையை முடித்தும்.. வெளியேறாமல் அமர்ந்திருந்த ஆளுநர் ரவி.. என்ன காரணம்?
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார்.
இறுக்கமான முகத்தையுடன் சபாநாயகர் வாசித்த தனது உரையை உற்று கவனித்தபடி ஆளுநர் ரவி அமர்ந்து இருந்தார்.
எதிர்பார்த்தபடியே இன்று தமிழ்நாடு சட்டசபை பரபரப்புடன் கூடியது. ஆளுநர் ரவி உரையில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு நிலவி வந்தது.
அதன்படியே இந்த மாதம் நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார்.
அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.
என்ன சொன்னார்?: சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை.
உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.
வெளியேறவில்லை; ஆனால் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார்.
இறுக்கமான முகத்தையுடன் சபாநாயகர் வாசித்த தனது உரையை உற்று கவனித்தபடி ஆளுநர் ரவி அமர்ந்து இருந்தார்
பெரும்பாலும் நிகழ்வின் முடிவில் போடப்படும் தேசிய கீதத்திற்காக அவர் காத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இல்லையென்றால் அவர் தேசிய கீதத்தை புறக்கணித்து வெளியேறினார் என்ற வாதம் வைக்கப்படும் என்பதால் அவர் அமர்ந்து இருக்கலாம்.
அதே சமயம் கடந்த முறையும் அவர் பாதியில் வெளியேறியதால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
அதை இந்த முறை தவிர்க்க அவையில் முழு உரை முடியும் வரை அவர் அமர்ந்திருக்கலாம். கடந்த ஆண்டும் இதேபோல் நடந்தது.
கடந்த ஆண்டு: கடந்த ஆண்டும் இதேபோல் ஆளுநர் ரவி.. தனது உரையை சரியாக வாசிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசினார்.
கடந்த ஆண்டு ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார்.
அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.
அதோடு தமிழ்நாடு அரசின் கீழ் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் ஆர். என் ரவி பயன்படுத்தாமல் தவிர்த்தார்.
இதெல்லாம் போக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகிறது. தமிழ்நாடு முதலீடுகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று முதலீடுகள் தொடர்பான வார்த்தைகளையும் ஏனோ ஆளுநர் ஆர். என் ரவி அப்படியே தவிர்த்து இருக்கிறார்.
ஆளுநரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி கடந்த சட்டசபையில் பேச தவறிய வார்த்தைகளை அவருக்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவு பேசினார்.
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை சபாநாயகர் அப்பாவு அப்படியே வாசித்துக்காட்டினார்.
ஆளுநர் தவற விட்ட வார்த்தைகளை அப்பாவு அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
வெளியேறிய ஆளுநர்: அதன்பின்தான் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர். என் ரவி சுயமாக பேசி உரைக்கு எதிராக தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியதும் ஆளுநர் ஆர். என் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய உரையை ஆளுநர் ஆர். என் ரவி முழுமையாக வாசிக்காததற்கு எதிராகவும், ஆளுநர் ரவி சுயமாக சில விஷயங்களை பேசியதற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உடனே தீர்மானம் நிறைவேற்றினார்.
இதையடுத்து ஆளுநர் சுயமாக பேசிய உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த முழு உரை சேர்க்கப்பட்டது.
இன்றும் அதேபோல் ஆளுநர் ரவி பாதி உரையை மட்டுமே நிகழ்த்தினார். அதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு முழு உரையை தற்போது பேசி வருகிறார்.