பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் குறைந்தபட்சம் 112 பேர் உயிரிந்ததுடன் மேலும் 760 பேர் காயமடைந்துள்ளனர்.

காஸா நகரில் நேற்று (29) இச்சம்பவம் இடம்பெற்றது.

மக்கள் மீது தனது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கருதி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

38 உணவு லொறிகளை ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்த நிலையில் ‘சனநெரிசல்’ ஏற்பட்டதகாவும், சிலர் லொறிகளினால் மோதப்பட்டு உயிரிழந்தாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் தொண்டர் அமைப்புகளும் கண்டித்துள்ளன.

இதேவேளை? மேற்படி சம்பவத்தை ஐநா பாதுகாப்புப் சபை கண்டிக்க வேண்டும் என ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தை கண்டிப்பதற்கான பிரேரணையொன்றை ஐநா பாதுகாப்புச் சபைகயிடம் அல்ஜீரியா முன்வைத்தது, எனினும், அமெரிக்கா அப்பிரேரணையை வீட்டோ செய்தது.

‘இது குறிதது ஐநாவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் வூட் கூறுகையில், இச்சம்பவம் குறித்த அனைத்து தகவல்களும் எம்மிடம் இல்லை. மக்கள் எப்படி இறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது’ என்றார்.

Share.
Leave A Reply