ரிதிமாலியத்த பகுதியில் சிறுமியைக் கொடூரமாக தாக்கிய சகுற்றத்தில் சிறுமியின் பெற்றோர் இன்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த பெற்றோரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோரால் தாக்கப்பட்ட 3 வயது சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply