வெள்ளை வேட்டி.. வெள்ளை சட்டை.. ‘வேல்’ பட கெட்டப்பில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா.. சூழ்ந்த ரசிகர்கள்.. மாஸ் லுக் போட்டோஸ்!

நடிகர் சூர்யா கொடுமுடியில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் இசையமைப்பாளார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கங்குவா திரைப்படம் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதுவிதமான டெக்னலாஜி பயன்படுத்தப்பட்டு ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை எடுத்துள்ளார் சிறுத்தை சிவா.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

மேலும் இப்படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. காரணம் இதுவரை பார்த்திடாத சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம் என கூறுகின்றனர்.

 அதேபோல் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் சூர்யாவின் மீதான எதிர்பார்ப்பே அதிகமாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படம் விரைவில் தியேட்டர்களில் எதிர்பார்க்கலாம்.

இப்படத்திற்கு பின் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

 தொடர்ந்து சூரரைப் போற்று கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் என தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார் சூர்யா.

 இவ்வளவு பிஸியான நேரத்தில் இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சூர்யாவின் வருகையை கண்ட ரசிகர்கள் அலைகடலென திரண்டனர். ரசிகர்களின் வெள்ளத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் சூர்யா.

இதில் இவரின் கெட்டப் தான் ஹைலைட்டே. வேல் படத்தில் வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டையில் மாஸ் கட்டியிருக்கும் சூர்யா அதே கெட்டப்பில் நெற்றியில் குங்குமத்துடன் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளது அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தது. தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Share.
Leave A Reply