புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
நேற்று புலத்சிங்கள ஹல்வத்துர பகுதியில் இங்கிரியிவிலிருந்து புலத்சிங்கள நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளால் ஒருவர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார் .
ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார் .
இதன் காரணமாகக் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .
இந்நிலையில் , பொலிஸார் தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் புலத்சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.