முடிதிருத்தும் கடையொன்றில் (சலூன்) ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நபர் ஒருவரை வெட்டிக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிகள் இருவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் இருவரையும் விடுதலை செய்தார்.

குற்றச்சாட்டின் பேரில் வீரசாமி அழகேஸ்வர விஸ்வநாதன் மற்றும் துவான் அஜீஸ் ராமநாதன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, முகமது நஜீம் மற்றும் கொலின் வீரன் ஆகியோரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தார்.

2022 ஓகஸ்ட் 05 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் புறக்கோட்டை, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் சிக்கையா நடேஷனைக் கொன்றதற்காக நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

முடிதிருத்தும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, பிரதிவாதிகள் நடேசனை கத்தியால் வெட்டிக் கொன்றனர் என்ற உண்மைகள் வெளிவந்தன.

அரச தரப்பு சட்டத்தரணி விஷ்வ விஜேசூரிய ஆஜராகியிருந்தார்.

Share.
Leave A Reply