முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் குறித்த பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் மர்ம பாெதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதனையடுத்து குறித்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மர்ம பொதியினை பரிசோதனை செய்யும் போது குறித்த பொதியின் உரிமையாளர் தன்னாலே இப்பொதி தவறவிடப்பட்டது என கூறி அடையாளம் காட்டி பொலிஸாரிடம் இருந்து வாங்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.