காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் ஒரு வீட்டை குறி வைக்க அங்கிருந்த நாய் குரைத்தே இரு சிங்கங்களையும் புறமுதுகிட்டு ஓட வைத்திருக்கிறது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், காட்டுக்கே ராஜா ஆனாலும், இது எங்க ஏரியா உள்ள வராத! என நாய் விரட்டியதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிய சிங்கங்கள் வளர்ந்து வருகிறது. 2020 கணக்கெடுப்பின்படி அங்கு சுமார் 674 சிங்கங்கள் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. தற்போது அங்கு சிங்கங்களின் இனப்பெருக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் சில நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சிங்கங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவது வழக்கம்.

இதனால் சில நேரங்களில் மனித – சிங்க தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அப்படி தோர்டி கிராமத்திற்குள் புகுந்த இரு சிங்கங்கள் அந்த வீட்டு நாய்களால் துரத்தப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

உலக அளவில் ஆசிய சிங்கங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில் குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில் மட்டுமே அவைகள் வாழும் ஒரே வசிப்பிடமாக இருக்கின.

தற்போது அந்த பூங்காவில் கடும் வறட்சி நிலையில் அங்கிருந்து வெளியேறிய இரு சிங்கங்கள், அந்த பூங்காவிலிருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோர்பி கிராமத்தில் தஞ்சம் புகுந்திருக்கின்றன.

மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் இரு சிங்கங்கள் சாலையில் உலா வந்து ஒரு வீட்டின் கேட் அருகே நிற்கின்றன.

அப்போது வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த நாய் பயப்படாமல் சொல்லப்போனால் மிகவும் ஆக்ரோஷமாக சிங்கத்தை மிகவும் கோபத்தோடு எதிர்கொண்டது.

Share.
Leave A Reply