ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த உடல்களில் இஸ்ரேல் அமெரிக்க பிரஜையொருவரின் உடலும் காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தாங்கள் அவர்கள் இருந்த பகுதிக்கு செல்வதற்கு சற்று முன்னதாக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது..
மீட்கப்பட்ட உடல்களில் கலிபோர்னியாவை சேர்ந்த ஹேர்ஸ் கோல்ட்பார்க் கொலின் என்பவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி நெவா இசைநிகழ்ச்சியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார்.
பணயக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேலிய பிரதமர் இணங்கிச்செல்லவேண்டும் என இவரது பெற்றோர் அதிகளவில் குரல்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துவந்ததுடன் சர்வதேச தலைவர்களையும் சந்தித்திருந்தனர். கடந்தமாதம் இடம்பெற்ற அமெரிக்க ஜனநாய கட்சியின் மாநாட்டிலும் இவர்கள் உரையாற்றியிருந்தனர்.