இலங்கையர்கள் நாளாந்தம் 6.5 பில்லியன் ரூபாய் கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கடந்த 26 மாதங்களில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் நாட்டு மக்கள் நாளாந்தம் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக புதிய பொருளாதார சீர்திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்கள் 196 பில்லியன் ரூபா கடனாளிகளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் நாம் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளோம்.

இவ்வகையான கடன் தொடர்பான கடுமையான நெருக்கடியில் இலங்கை உள்ளது.

அதே நேரத்தில் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டின் பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 106 வீதம் அதிகரித்துள்ளது.

அத்துடன், உணவு மற்றும் சேவைகளின் விலைகள் 138 வீதம் அதிகரித்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply