இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்காவும் பிரிட்டனும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஈரான் மீண்டும் பதில்தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் அதற்கு தயாராகவுள்ளோம் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஜோ பைடன் நிர்வாகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது இடம்பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் இடையிலான நேரடி மோதல் இத்துடன் முடிவடையவேண்டும், என தெரிவித்துள்ள அவர் லெபனானிலும் காசாவிலும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளிற்கு அமெரிக்கா தலைமை தாங்குகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என பிரிட்டிஸ் பிரதமரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரானின் வன்முறைக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு இஸ்ரேலிற்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள அவர் பிராந்தியத்தில் மேலும் நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.