ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட முடிவு செய்த கல்லூரி மாணவி, திடீரென தனது ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் போராட்டம் நடத்தினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதையடுத்து, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியை கைது செய்தனர்.
2022 ஆம் ஆண்டில், ஹிஜாப் அணியாததற்காக 22 வயது பெண் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Iran’s authorities must immediately & unconditionally release the university student who was violently arrested on 2 Nov after she removed her clothes in protest against abusive enforcement of compulsory veiling by security officials at Tehran’s Islamic Azad University. 1/2 pic.twitter.com/lI1JXYsgtm
— Amnesty Iran (@AmnestyIran) November 2, 2024
ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் ஆடையைக் கழற்றியதாகக் கூறிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்டதால் ஆடைகளை களைந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.