‘என்னடா.. இந்தக் கட்டுரை முழுக்க ஆணாதிக்கம்.. ஆணாதிக்கம் என்று அனத்தியிருக்கிறானே.. பெண்களில் ஆதிக்கம் செய்பவர்கள் இல்லையா.. அவர்கள் கோக்குமாக்காக எதையும் செய்வதில்லையா.. நல்லா இருக்கே உங்க நியாயம்?” என்று சிலருக்குத் தோன்றியிருக்கலாம்.

இந்த சீசன் சுவாரசியமில்லாமல் பயணிப்பதற்கு ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக பிரித்திருப்பது ஒரு முக்கியமான காரணம் என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. இதற்கு முன் வந்த சீசன்களில் கலந்துதானே இருந்தார்கள்?! அதிலிருந்து விலகி வித்தியாசமான முயற்சி ஒன்று அமைவது வரவேற்கத்தக்கதுதான்.

இப்படி பாலின அடிப்படையில் பிரித்திருப்பதால் ஒரு முக்கியமான விஷயம் மீண்டும் மீண்டும் பதிவாகிறது. ஏன் அம்பலமாகிறது என்று கூட சொல்லி விடலாம். அது ஆணாதிக்க உணர்வு. என்னதான் நாகரிக உலகில் நடைபோடுகிறோம் என்று நாம் பீற்றிக் கொண்டாலும் சமூகத்தின் பல்வேறு இடங்களில் ஆணாதிக்க உணர்வு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறது.

சவுந்தர்யாவின் gesture பற்றிய சத்யாவின் கமென்ட், விஷாலின் வில்லங்கமான நக்கல், ஆண்கள் அணி டாஸ்க் செய்ய ஒப்புக் கொள்ளாதது போன்ற எல்லாமே இந்த ஆணாதிக்க உணர்வின் வெளிப்பாடுகள்.

இது இந்த தனிநபர்கள் மீதான புகார் அல்ல. பிக் பாஸ் வீடு என்பது ‘சமூகத்தின் ஒரு துண்டு’ என்கிற வகையில் சமூகத்தில் உள்ள பிற்போக்குத்தனங்களைத்தான் இவர்களும் பிரதிபலிக்கிறார்கள். அந்த வகையில் இரு அணிகளாகப் பிரிந்திருப்பதின் மூலம் சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் அம்பலப்படுவது நல்லதுதான்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 35

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 10-11-2024 Vijay Tv Show -Day 35

Share.
Leave A Reply