கொழும்பு பிரதான வீதியில் கொனபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனம் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளார்.
32 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த தந்தையும் இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 வயதுடைய மகனும் 4 வயதுடைய மகளுமே காயமடைந்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.