யாழ்.பருத்தித்துறையில் உள்ள கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்றையதினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ் உத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் தனியார் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேற உத்தரவு; அனுர அரசின் அதிரடி! | Army Ordered To Leave Private Land In Jaffnaஅதன்படி இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறிமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இராணுவம் வெளியேற உள்ளது.

அதேவேளை கடந்த மாதம், 30 வருடங்களாக மூடப்பட்டிருந்த வசாவிளான் – அச்சுவேலி வீதி மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி அனுர அரசாங்கம் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply