சுவிற்ஸர்லாந்து வலே மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வலே மாநிலத்தில் அதிகாலை 4.30 மணியளவில் பார ஊர்தியுடன் அதிவேகமாக கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்தின்போது படுகாயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply