உலக வரலாற்றின் மிகவும் மோசமான சர்வாதிகாரி யாரென்று கேட்டால் தூக்கத்தில் கூட நாம் ஹிட்லர்தான் என்று கூறுவோம்.
இரண்டாம் உலகப்போர், யூதர் இனப்படுகொலை, அடக்குமுறை மற்றும் மனிதர்கள் மீது கொடூர சோதனைகள் என ஹிட்லர் செய்த கொடூரங்கள் ஏராளம். அதனால்தான் அவரைப்பற்றிய ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் அவரை உலகின் கொடூரமான சர்வாதிகாரி என்று இன்றுவரை கூறிவருகிறது.
ஆனால் ஹிட்லரை விட பலமடங்கு கொடூர குற்றங்கள் புரிந்த இரக்கமில்லாத சர்வாதிகாரி ஒருவர் உள்ளார்,
ஆனால் அவர் வரலாற்றில் வெகுசிலரால் மட்டுமே கவனிக்கப்பட்டார். அவரின் கொடூர செயல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.
அவர் உகாண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த இடி அமின்.
உகாண்டாவின் கொலைகாரர்
இடி அமின் உகாண்டாவின் கசாப்புக் கடைக்காரன்(Butcher of Uganda) என்ற புனைபெயரால் அழைக்கப்படுகிறார்.
ஒரு நாட்டின் அதிபர் இப்படிப்பட்ட பெயரில் அழைக்கப்படுகிறார் என்றால் அவர் செய்த கொடூரங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்.
இடி அமீன் 1971 இல் உகாண்டாவில் அதிகாரத்தைக் கைப்பற்றி எட்டு ஆண்டுகள் கொடூரமாக ஆட்சி செய்தார்.
இடி அமீன் செய்த குற்றங்களின் பட்டியல் இன ஒடுக்குமுறை, அரசியல் அடக்குமுறை, சட்டத்திற்கு புறம்பான மரணதண்டனை மற்றும் சித்திரவதை என நீண்டுக்கொண்டே போகும்.
மக்கள் மீதான அடக்குமுறைகள்
பல அரசியல் போட்டியாளர்கள் அவரது கோபத்திற்கு ஆளானார்கள்,
இடி அமீன் செய்த சில மோசமான செயல்கள் அவரது சொந்த மக்களளையே பாதித்தது. அவர் ஒரு பொருளாதாரப் போரைத் தொடங்கினார்,
மேலும் உகாண்டாவின் குடிமக்கள் நாடு கடத்தப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர், தாக்கப்பட்டனர் மற்றும் காரணமின்றி சித்திரவதை செய்யப்பட்டனர்.
அவர் எத்தனை உயிர்களை எடுத்தார் என்பது அவருக்கும் தெரியாது, வரலாற்றுக்கும் தெரியாது, தோராயமாக 100,000 மக்கள் அவரால் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவர் இறுதியாக 1979 இல் உகாண்டா தேசியவாதிகளால் நாடுகடத்தப்பட்டார், பின்னர் சவுதி அரேபியாவில் வசித்து வந்தார், அங்கு அவர் 2003 இல் பல உறுப்பு செயலிழப்புகளால் இறந்தார்.
மனித இறைச்சி சர்ச்சை
இடி அமின் இறந்தவர்களின் தலைகளில் சிலவற்றை தனது குளிர்சாதன பெட்டியில் வைத்து மனித உடல் உறுப்புகளை சாப்பிட்டதாக வதந்தி பரவியது.
அவரது முன்னாள் சுகாதார அமைச்சர் ஹென்றி கியெம்பா, “பல சந்தர்ப்பங்களில் [அமீன்] தான் கொன்றவர்களின் உறுப்புகள் அல்லது சதைகளை சாப்பிட்டதாக மிகவும் பெருமையாக என்னிடம் கூறினார்.” என்று கூறியிருந்தார்.
ஆனால் இது உறுதிசெய்யப்படவில்லை.
பாதாள சிறை
அமினின் சிறை மற்றும் சித்திரவதை அறை 1970 களில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்த கட்டிடம் ஒரு ஆயுதக்கிடங்காக பயன்படுத்தப்படும் என்று நம்பப்பட்டது. பாதாள சிமென்ட் குகைகள் கன் பவுடரை சேமித்து வைப்பதற்காகவே இருந்தன.
அதன் நுழைவாயில் மின்மயமாக்கப்பட்டது மற்றும் அறைகள் மின்மயமாக்கப்பட்ட நீரின் கால்வாயால் சூழப்பட்டன.
அதன் அறைகள் இருட்டாக இருந்தன, ஒவ்வொரு அறையிலும் வாந்தி, இரத்தம் மற்றும் மலம் நிறைந்ததிருந்தன.
ஒவ்வொரு அறையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் அடைக்கப்பட்டனர். இதனால் பலர் மூச்சுத்திணறி இறந்தனர், பலர் பட்டினியால் இறந்தனர்,
மேலும் சிலர் தங்கள் துன்பங்களை முடித்துக் கொள்ள, மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
80,000 ஆசிய மக்களை வெளியேற்றினார்
1972 இல் உகாண்டாவிலிருந்து முழு ஆசிய மக்களையும் வெளியேற்ற அமீன் முடிவு செய்தார, அவர் கடவுள் தன்னிடம் இதைச் செய்ய சொன்னதாக கூறினார்.
அவர் 80,000 தெற்காசியர்களுக்கு உகாண்டாவில் பிறந்தவர்கள் உட்பட அனைவரையும் 90 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் இல்லையெனில் வன்முறை விளைவுகளை சந்திக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அவர்கள் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது, மேலும் அவர்களது 4,000 கடைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அமீனின் நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
இது நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. உகாண்டாவிலிருந்து வெளியேற்றப்ப்பட்டவர்களில் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், ஆசிரியர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் இருந்தனர்.
இதனால் உகாண்டாவின் மருத்துவத் துறை, கல்வித்துறை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் என அனைத்தும் முடங்கியது.
தேசதுரோகத்திற் ஆதாரமே இல்லாமல் மக்களை கொன்றார்
அமீனின் பயங்கரவாத ஆட்சியின் போது, அவர் பல கற்பனை எதிரிகளைக் கொண்டிருந்தார், தேசத்துரோகம் செய்ததாக சந்தேகிக்க அவருக்கு உண்மையான காரணம் இல்லை என்றாலும், அனைத்து எதிரிகளையும் தண்டிப்பது தனது கடமை என்று அவர் நினைத்தார்.
அமீன் தனது ஆட்சிக்கு எதிராக யாரேனும் சதி செய்வதாக உணர்ந்தால் அவர்களுக்கு பொது மரணதண்டனைக்கு உத்தரவிட்டார்,
மேலும் அவற்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் செய்தார். அவர் கொல்லப்பட்டவர்களின் உடல்களை நைல் நதியில் தூக்கி எறிந்தார். உகாண்டாவிலிருந்து நைல் நதியில் உடல்கள் தொடர்ந்து மிதந்து வருவதைக் காண முடிந்தது.
சில சமயங்களில், விக்டோரியா ஏரியில் உள்ள ஒரு அணையானது உடல்களால் அடைக்கப்படுவதால் அது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
படிப்பறிவு இல்லாதவர்
இடி அமீன் படிப்பறிவில்லாதவர், அவர் நான்காம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார், மேலும் அவர் குறிப்பாக படித்த ஆப்பிரிக்கர்களால் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தார்.
எனவே கல்வியைத் தேடுவதற்குப் பதிலாக அல்லது நாட்டிற்குச் சிறப்பாகச் சேவை செய்வதற்காக அறிவார்ந்த, திறமையானவர்களை அதிகாரப் பதவிகளில் அமர்த்துவதற்குப் பதிலாக, அவர் பெரும்பாலான அறிவாளிகளை நாட்டை விட்டு விரட்டினார்.
ஹிட்லரின் விசிறியாக இருந்தார்
ஆசிய மக்கள்தொகை ஒழிப்பு மற்றும் வெகுஜன இனப்படுகொலை மீதான அவரது வெளிப்படையான விருப்பம் போன்றவற்றால் அமீன் அடால்ஃப் ஹிட்லருடன் ஒப்பிடப்படுகிறார்.
அவர் ஹிட்லரைப் பற்றி பொது இடங்களில் பேசுவதற்கு வெட்கப்படவில்லை, அவர் ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை எரித்தது சரியானது என்று கூறினார்.
நான்காவது மனைவியை கொடூரமாக கொன்றார்
அமினுக்கு ஆறு மனைவிகள் இருந்தனர் மற்றும் அவர் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
அவரது நான்காவது மனைவி கே அமீன், ஏற்கனவே திருமணமானவராக இருந்த போதிலும், 1966 இல் சர்வாதிகாரியை மணந்தார்.
அவர் விசுவாசமற்றவர் என்றும், மற்றொரு ஆணால் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இருவரும் 1973 இல் விவாகரத்து செய்தனர் மற்றும் அடுத்த ஆண்டே அவரின் கொடூரமான சிதைக்கப்பட்ட மற்றும் துண்டாக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பிரேத பரிசோதனையில் அவர் மூன்று முதல் நான்கு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.