“20 வயதில் கல்லூரியில் படிக்கும் ஒரு அமெரிக்க இளம்பெண், கவர்ச்சி படங்களை வெளியிட்டு நடிகைகளைவிட அதிகமாக சம்பாதித்து வருகிறார்.

புளோரிடா மாகாணத்தை சேர்ந்த சோபி ரெயின் எனும் அந்தப் பெண், கடந்த சில மாதங்களாக, வயது வந்தோருக்கான வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம், டிக்டாக் பக்கங்களிலும் இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் ஓராண்டிற்கு உள்ளாகவே ரூ.364 கோடி சம்பாதித்து இருக்கிறார்.

அதாவது ஒரு நாளைக்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டி இருக்கிறார். டிக்டாக் வலைத்தள பக்கத்தில் அவர் மழையில் நடனமாடும் வீடியோவை மட்டும் இதுவரை சுமார் 10 கோடி பேர் ரசித்து உள்ளனர்.

சமீபத்தில் பிரபல இணைய இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், \”என்னை விபசாரி என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளாத கன்னிப்பெண்.

ஆழமான மத நம்பிக்கை கொண்டவள். எனது புகைப்படங்களால் எனது பெற்றோரின் கடன்களை அடைத்துவிட்டேன்.

ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் என்ன பேசிக்கொண்டாலும், நான் மகிழ்ச்சியாக வங்கியை நோக்கி நடப்பேன்\” என்று கூறி வியக்க வைக்கிறார்.

Share.
Leave A Reply