ஒபாமா நிர்வாகமும் அதன் பிராந்திய நட்பு நாடுகளும் இஸ்லாமிய பினாமி படைகளைப் பயன்படுத்தி சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்க இடைவிடாத தாக்குதலை தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஹயாத் அல்-ஷாம் (HTS) என்ற ஆயுதக்குழு டமாஸ்கஸைக் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்கா, துருக்கி மற்றும் இஸ்ரேல் ஒவ்வொன்றும் அந்நாட்டில் அவற்றின் சொந்த நலன்களைப் பின்தொடர்கின்ற நிலையில், சிரியா இப்போது ஒரு பிற்போக்குத்தனமான, ஏகாதிபத்திய தலைமையிலான துண்டாடலை முகங்கொடுக்கிறது.
சிரியாவின் பழைய சுவர் நகரமான டமாஸ்கஸில் உள்ள உமையாத் மசூதியின் முற்றத்தில் அல்-கொய்தாவுடன் இணைக்கப்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) இன் கொடியை முகமூடி அணிந்த நபர் எடுத்துச் செல்கிறார். செவ்வாய் கிழமை
வாஷிங்டனும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் (IDF) சிரியா மற்றும் ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ரஷ்யா உட்பட அதன் நட்பு நாடுகளின் இராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதங்களை அழிக்க நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய எதிர்ப்புக் குழுக்கள் மன்பிஜ் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள பிற நகரங்களை அமெரிக்க ஆதரவிலான சிரிய குர்திஷ் படைகளிடம் (SDF) இருந்து கைப்பற்றியுள்ளன.
SDF யூப்ரடீஸ் நதியின் மேற்குக் கரையில் உள்ள டெய்ர் அல்-ஜூர் மற்றும் அதன் எண்ணெய் நிலையங்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளது.
சர்வதேச சட்டத்தையும் மீறி சிரியாவின் கோலன் குன்றுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.
கிழக்கு சிரியாவில் SDF மீது தாக்குதல்களை நடத்தி வருகின்ற ISIS-ஐ தோற்கடிப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை வாஷிங்டன் வலியுறுத்தி உள்ளது—இது போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான அதன் முயற்சிகளை மேலும் தொடரும் என்பதற்கான ஒரு சமிக்ஞையாகும்.
புதுப்பிக்கப்பட்ட போர் மற்றும் சிரியா துண்டாடப்படுவதற்கான சாத்தியக்கூறு 21ம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான மோதலின் உச்சத்தில் வருகிறது.
சிரியாவிலுள்ள பல நகரங்களில் செல்வந்தர்கள் மேலும் செலவந்தர்களாக வளர்ந்தனர். மார்ச் 2011 இல், முன்னர் லிபியாவில் இடம்பெற்றது போலவே, வீழ்ச்சிகண்டு வந்த சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் மீதான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக, சிரிய ஆட்சி கொடிய அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.
வாஷிங்டன் நீண்டகாலமாக எதிர்த்து வந்த ஒரு ஆட்சிக்கு எதிராக, அதன் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதற்கு ஒரு பெரிய அளவிலான நடவடிக்கைக்கான சாக்குபோக்காக இதனை சுரண்டிக்கொண்டது.
மேலும், இப்பிராந்தியத்தில் அரபு வசந்தம் என்று அறியப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் பரந்த மேலெழுச்சிக்கு இடையே, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் ஒருமித்த குரலில், சீற்றத்துடன் சிரியாவின் அடக்குமுறையைக் கண்டித்தன. அதே நேரத்தில் இவற்றின் நட்பு நாடுகளான பஹ்ரைன் மற்றும் யேமனில் மிக மோசமான அடக்குமுறைக்கு ஆதரவான விமர்சனங்களை மட்டுமே இவை வெளியிட்டு வந்தன.
CIA மற்றும் வாஷிங்டனின் பிராந்திய கூட்டாளிகளான வளைகுடா பெட்ரோலிய-முடியாட்சிகள், துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகியன, அசாத்தை பதவியிலிருந்து அகற்றும் பணியை மேற்கொள்வதற்கு, அவற்றின் பினாமிகளாக அடுத்தடுத்து வந்த இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்து, பொறுப்பெடுத்து, பயிற்சிகள் அளித்தன மற்றும் உதவின.
இந்த சன்னி குறுகிய மதவாத சக்திகள், அவற்றில் சில அல்-நுஸ்ரா முன்னணி போன்றவர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்புகொண்டிருந்தனர். அவர்கள் கேலிக்குரிய வகையில் “புரட்சியாளர்கள்” என்று புகழப்பட்டனர்.
ஏராளமான போலி-இடது குழுக்கள் இந்த சக்திகளை “புரட்சியாளர்களாக” ஊக்குவிக்க விரைந்தன.
இந்த “புரட்சியாளர்கள்” யார் என்பதை விளக்க அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட வர்க்க சக்திகளைப் இவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் தங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை விவரிக்கவோ அல்லது உள்நாட்டில் தங்கள் ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் தடை செய்து சட்டவிரோதமாக்கிய நிலப்பிரபுத்துவ வளைகுடா சர்வாதிகாரிகள் ஏன் வெளிநாட்டில் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் ஒரு “முற்போக்கான புரட்சியை” ஆதரிக்கிறார்கள் என்பதை விளக்கவோ அக்கறை கொள்ளவில்லை.
இந்த பிற்போக்கு சக்திகளுக்கு, CIA யின் operation Timber Sycamore என்ற திட்டங்கள் மூலமாக, பரந்த அளவான நிதி வழங்கப்பட்டது. இந்த Timber Sycamore நடவடிக்கை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கமாக வெளிப்பட்டது.
இதே போலி-இடது குழுக்கள், இப்போது காஸாவில் இடம்பெற்றவரும் இனப்படுகொலைக்கு நிதியளிப்பவர்கள் மற்றும் குற்றவாளிகளுடன் கூட்டணி வைத்து, இந்த இஸ்லாமிய பிற்போக்குவாதிகளின் கரங்களில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சியை தழுவிக் கொண்டிருக்கின்றன.
போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்டுவரும் இந்தப் போரில், கிட்டத்தட்ட 500,000 மக்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் உலகளவில் இடம்பெற்றுவரும் மோதல்களில், இந்த மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாகும்.
சிரிய ஆட்சியின் பக்கத்தில் ரஷ்யா மற்றும் ஈரானின் தலையீட்டிற்குப் பின்னர் மோதலின் அளவு தணிந்தாலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தீவிரமான யுத்தம் தொடர்ந்தன. கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், இந்த மோதலில் 450 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய தூண்களான எண்ணெய் மற்றும் விவசாயத்தை போர் அழித்துவிட்டது.
இதர மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறியதாக இருந்தாலும், எண்ணெய் ஏற்றுமதி 2010ல் அரசாங்க வருவாயில் கால் பங்காக இருந்தது.
அதே நேரத்தில், உணவு உற்பத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதே அளவு பங்களிப்பு செய்தது. இந்த நிலையில், ISIS மற்றும் பின்னர் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் படைகள் உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசாங்கம் அதன் பெரும்பாலான எண்ணெய் வயல்களின் கட்டுப்பாட்டை இழந்தது.
மேலும், 2011 இல், சர்வதேச பொருளாதாரத் தடைகள் எண்ணெய் ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்தின. கடந்த ஆண்டு, ஆட்சியின் கட்டுப்பாட்டு பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 9,000 பீப்பாய்களுக்கும் குறைவாக (2010 இல் 380,000 பீப்பாய்களில் இருந்து) இருந்த படியால், ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதையே சிரியா பெரிதும் நம்பியிருந்தது.
அமெரிக்க ஆதரவு படைகள் ஈராக்கிற்குள் நுழையும் புக்காமுல் கடவையை கைப்பற்றியுள்ளதால், இது மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. மின்சாரம் நீண்ட காலமாக பற்றாக்குறையாக உள்ளதால்,
நாள் முழுவதும் மின்வெட்டு உள்ளது. இதன் பொருள், குடும்பங்கள் குளிர்சாதன பெட்டிகளை பாவிக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதுடன், அவர்கள் சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாலை 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.
இந்தப் போர் சிரியாவின் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, அதன் விவசாய அமைப்பு முறை மற்றும் நீர்ப்பாசன வலையமைப்புகளை நாசமாக்கியுள்ளது. மேலும் இந்தப் போர், வெடிக்காத பீரங்கி குண்டுகள், கண்ணிவெடிகள், கொத்துக் குண்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகளின் கொடிய மரணகரமான பாரம்பரியத்தை விவசாய நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் கட்டிடங்களில் விட்டுச்சென்றுள்ளது.
2011 ஆம் ஆண்டில் 196 நாடுகளின் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவரிசையில் 68 வது இடத்தில் இருந்த குறைந்த நடுத்தர வருமானத்தை கொண்டிருந்த சிரியா, 2010 முதல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டவற்றை இழந்து, பாலஸ்தீனிய பகுதிகள் மற்றும் சாட் நாடுகளுக்கு இணையாக 129 வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இப்போது ஒரு குறைந்த வருமானம் கொண்ட நாடாக ஆக்கப்பட்டுள்ள சிரியாவின் குடும்பங்கள், தமது மேசையில் உணவை வைப்பதற்காக போராடி வருகின்றன.
21 மில்லியன் மக்கள் வாழும் சிரியாவில் இருந்து, சுமார் 5 மில்லியன் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரில் 7 மில்லியன் பேர்கள் சிரியாவிற்குள், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களில் பலர் நெரிசல் மிகுந்த முகாம்களில் வாழ்ந்து வருவதுடன், தங்கள் உரிமைகள், நிலம் மற்றும் சொத்து ஆவணங்களையும் இழந்துள்ளனர். 20-40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் இறப்பு அல்லது இடம்பெயர்வு காரணமாக, சுமார் 30 சதவீத குடும்பங்கள் தங்கள் உறுப்பினர்களை இழந்து வாழ்கின்றனர்.
சிரியாவின் மிகவும் திறமையான தொழிலாளர்கள் சிலரின் இடம்பெயர்வு, நாட்டில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் உள்ளிட்ட பொதுச் சேவைகளைக் குறைத்து, அதிகமான மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிரியாவில் தற்போது கொலரா பாதிப்பு தீவிரமாக உள்ளது. மீண்டும் மீண்டும் பரவும் நோய்கள், நீரினால் பரவும் நோய்கள், தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவை ஊட்டச்சத்து குறைபாடு விகிதங்களை அதிகரிக்க பங்களிப்பு செய்கின்றன.
போரில் நாட்டின் உற்பத்தி வசதிகளில் பெரும்பாலானவை அழிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் இப்போது முறைசாரா துறையில் குறைந்த ஊதிய விகிதத்தில் வேலை செய்கிறார்கள்.
எரிபொருள் மற்றும் உணவுக்கு கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட மானியங்களை அரசாங்கம் விலக்கிக் கொண்டதால், குடும்பங்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் குடும்ப உறுப்பினர்கள் அனுப்பும் பணத்தில் மேலும் மேலும் தங்கியிருக்கத் தொடங்கின. அதே நேரத்தில், ஊதியங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதால், செல்வந்தர்களின் செல்வமும் வருமானமும் வளர்ந்துள்ளன.
2010 இல் அதீத வறுமை கிட்டத்தட்ட இல்லாத நிலையில், 2022ம் ஆண்டில் இது சிரியர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை, அதாவது 5.7 மில்லியன் மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளது. சர்வதேச வறுமைக் கோட்டின் அடிப்படையில், சுமார் 16.7 மில்லியன் மக்கள் (மக்கள் தொகையில் 70 சதவீதம்) வறுமையில் உள்ளனர்.
மிகவும் ஏழ்மையானவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அலெப்போ, ஹமா மற்றும் டெய்ர் எல்-ஸூர் மாகாணங்களில் வாழ்கின்றனர். மேலும் வடகிழக்கு மாகானங்களில் வாழ்பவர்கள் மிக உயர்ந்த அளவிலான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
2010 இல் டமாஸ்கஸில் உள்ள வீட்டுத் தொகுதி
சிரியாவின் பயங்கரமான வாழ்க்கை நிலைமைகளுக்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய சகாக்கள் மீதே உள்ளன. அவை சிரியாவை பட்டினி போட்டு அடிபணிய வைக்க முனைந்துள்ளன.
ஈரான், ரஷ்யா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளின் உதவியுடன் அசாத், நாட்டின் பெரும்பகுதியை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாலும், முதலாவது ட்ரம்ப் நிர்வாகம் சிரியாவை திவாலாக்க முனைந்த நிலையில், நாட்டில் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்த முடியவில்லை — 2020 இல், சிரியாவின் வங்கித் துறையை இலக்கில் வைத்து இருதரப்பு மற்றும் இரண்டாம்நிலை தடையாணைகளை விதித்து, அதன் ஏற்றுமதி தொழில்துறைகள் மற்றும் வணிகங்களின் மூச்சை ட்ரம்ப் நிர்வாகம் திணறடிக்க செய்தது.
அமெரிக்கா, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மீதான அதன் கட்டுப்பாட்டின் மூலமாக, டமாஸ்கஸை சுற்றி சுருக்குக் கயிற்றை இறுக்குவதற்காக, சிரியாவுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ள லெபனானின் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை 2019 இல் வடிவமைத்தது.
ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கைகள் டாலர்களுக்கான தேவையை கடுமையாக அதிகரித்து, வாழ்க்கைச் செலவில் பாரிய அதிகரிப்புக்கு வழிவகுத்தன. மேலும், சிரியாவின் மறுசீரமைப்புக்கு உதவுவதற்கான எந்த உதவியையும் அவை தடுத்து நிறுத்தின. கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக, அமெரிக்க/நேட்டோ தலைமையிலான போரின் காரணமாக, அதிகரித்து வந்த கோதுமையின் விலை நாட்டில் வறுமையை மேலும் அதிகரித்திருந்தது.
மேலும் பிப்ரவரியில், துருக்கியையும் சிரியாவையும் தாக்கிய பேரழிவுகரமான பூகம்பங்கள் சிரியாவின் சமூகப்-பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி, 6,000 க்கும் அதிகமான மரணங்களை விளைவித்து, சுமார் 10,000 க்கு அதிகமான கட்டிடங்களை நாசமாக்கி, சுமார் 265,000 மக்களை வீடற்றவர்களாக ஆக்கின.
உலக வங்கியின் கூற்றுப்படி, இந்த பூகம்பமானது, சிரியாவில் 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான நேரடி பெளதீக சேதத்தை ஏற்படுத்தியதுடன், சிரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.5 சதவிகித சுருக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே 2011 இல் 67 பில்லியன் டாலர்களிலிருந்த GDP, 2022 இல் 12 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, பல குடும்பங்கள் அவர்களின் முக்கிய உணவுப்பொருட்களை இழந்தனர். மேலும், மில்லியன் கணக்கான மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்து வாழத் தள்ளப்பட்டனர்.
ஜிண்டெரிஸ் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மக்கள் தங்கள் தளபாடங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அகற்றிக்கொண்டிருக்கின்றனர். பிப்ரவரி 14, 2023 செவ்வாய்க்கிழமை, சிரியாவின் அலெப்போ மாகாணம். [AP Photo/Ghaith Alsayed]
மேலும் இவை, பொதுத்துறை ஊதியங்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து, தொழிலாளர்களை இரண்டாம் தர வேலைகளை ஏற்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தி, அசாத் ஆட்சிக்கு எஞ்சியிருந்த ஆதரவையும் அழித்தன. மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாக கடந்த ஆண்டு சுவய்டா, டாரா மற்றும் இட்லிப் போன்ற பகுதிகளில் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன.
சிரியா மீதான பினாமிப் போரின் தொடக்கத்தில், அசாத்தை இடைநீக்கம் செய்த பின்னர், அரபு லீக் அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டது. மேலும், வளைகுடா நாடுகள் டமாஸ்கஸுடன் உறவுகளை மீண்டும் ஏற்படுத்தியிருந்தன என்றாலும், இது முதலீடு அல்லது குறிப்பிடத்தக்க உதவியை விளைவிக்கவில்லை. மாறாக, அசாத் ஆட்சியின் உயிர்வாழ்வதற்கான கடைசி வாய்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.
சிரியாவின் பொருளாதாரம் தற்போது தொடர் வீழ்ச்சியில் உள்ளது. பிப்ரவரி மற்றும் நவம்பர் 2023 க்கு இடையில், அமெரிக்க டாலருக்கு நிகரான சிரிய பவுண்ட் அதன் மதிப்பில் பாதியை இழந்து,
பணவீக்கத்தை பாரியளவில் 88 சதவீதமாக உயர்த்தியது, இது முந்தைய ஆண்டின் பணவீக்க விகிதத்தை விட இருமடங்காகும். உலக உணவுத் திட்டத்தின் படி, பொருட்களை வாங்கும் சக்தி குறைந்ததால், அதிக விநியோக செலவுகள் காரணமாக, விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தது. மேலும், சிரிய கொள்கை ஆய்வு மையம், சிரிய மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பெற முடியாமல் படுமோசமான வறுமையில் வாழ்கின்றனர் என்று கூறியுள்ளது.
ஐ.நா. இந்த ஆண்டு சிரியாவிற்குள் அதன் விடையிறுப்புக்கு 4.07 பில்லியன் டாலர் நிதி கேட்டது, இதுவரை அதில் 31.6 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
கடந்த வசந்த காலத்தில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கை, சிரியாவின் நீடித்த பொருளாதாரச் சுருக்கம் 2024 இல் மேலும் 1.5 சதவிகித சரிவுடன் தொடரும் என்று எதிர்பார்க்கிறது. மோதல் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கருதி, உணவு மற்றும் எரிபொருளுக்கான அரசாங்க மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த உண்மையான அவநம்பிக்கையான நிலைமை, போட்டிக் குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நாட்டை துண்டாடும்போது, இன்னும் மோசமாகிவிடும்.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.