“சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சாலைகளில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் கூட அதை தடுப்பதை விட, வீடியோ எடுப்பதிலேயே ஆர்வம் காட்டுபவர்கள் தான் அதிகம் உள்ளனர்.

ஆனால் சாலையில் மின் கம்பிகளில் சிக்கிய புறாவை 2 வாலிபர்கள் போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

‘நேபால்இன்ரீல்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பகிரப்பட்ட அந்த வீடியோவில், மின் கம்பிகளுக்கு இடையே ஒரு புறா சிக்கிக் கொள்ளும் காட்சிகள் உள்ளது. அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 வாலிபர்கள் காரை நிறுத்தி அதன் மீது ஏறுகின்றனர்.

பின்னர் ஒருவரின் தோள் மீது அமர்ந்து மற்றொருவர் ஏறி புறாவை கம்பிகளில் இருந்து மீட்கும் காட்சிகள் உள்ளது. பறவைகள் மீதும் கருணை காட்டிய இந்த வாலிபர்களின் செயல் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த வாலிபர்களை ரியல் ஹீரோ என பாராட்டி பதிவிட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nepal In Reels (@nepalinreels)

Share.
Leave A Reply