பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்யும் விட­யத்தில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் திணறிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

குறிப்­பாக, அரிசி விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்­தினால் எந்த முடி­வையும் எடுக்க முடி­யாத நிலை நீடிக்­கி­றது.

கடந்த செப்­டெம்பர் மாதம் அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­விக்கு வந்த பின்னர் தொடங்­கிய இந்த அரிசி பிரச்­சினை, அவர் 100 நாட்­களை நிறைவு செய்த பின்­னரும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில், இந்தப் பிரச்­சினை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்ட போது அரிசி பிரச்­சி­னைக்கு தாங்­களும் தீர்வைத் தேடிக் கொண்­டி­ருப்­ப­தாக அமைச்­ச­ரவை பேச்­சாளர் நளிந்த ஜய­திஸ்ஸ கூறி­யி­ருக்­கிறார்.

இது இந்த விவ­கா­ரத்தில் அர­சாங்கம் என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் குழம்பிப் போய் இருக்­கி­றது என்­பதை அப்­பட்­ட­மாக வெளிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

ஆட்­சிக்கு வந்து மூன்று மாதங்­க­ளுக்கு மேலாகி விட்ட போதும், இன்­னமும் தீர்வைத் தேடிக் கொண்­டி­ருப்­ப­தாக அர­சாங்­கத்­தினால் பொறுப்­பின்றி கூற முடி­யாது.

ஏனென்றால், இது ஒரு அத்­தி­யா­வ­சிய பிரச்­சினை, அன்­றாட பிரச்­சினை. நாளாந்தம் உண­வுக்கு அரிசி தேவை.

அது சாதா­ரண மக்­க­ளுக்கு போது­மான அளவில் கிடைக்க வேண்டும். அதே­வேளை நியா­ய­மான விலை­யிலும் கிடைக்க வேண்டும்.

இந்த இரண்டு விட­யங்­க­ளிலும் அர­சாங்­கத்­தினால் தனது பொறுப்பை நிறை­வேற்ற முடி­ய­வில்லை.

ஆட்­சிக்கு வந்­த­வுடன் அர­சாங்கம், அரிசி இறக்­கு­ம­திக்கு தனி­யா­ருக்கு அனு­மதி அளித்­தது. அரி­சிக்கு தட்­டுப்­பாடு ஏற்­படப் போகி­றது என தெரிந்து கொண்ட பின்னர் இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டது.

தனி­யார்­து­றை­யினர் அரிசி இறக்­கு­மதி செய்ய அனு­ம­திக்­கப்­பட்­டதன் மூலம், இது­வ­ரையில் ஒரு இலட்­சத்து 20 ஆயி­ரம் மெட்றிக் தொன்னுக்கும் அதி­க­மான அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த அரிசி இறக்­கு­ம­தியின் மூலம் அர­சாங்கம் மிகப்­பெ­ரிய வரு­மா­னத்தை பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. ஒரு கிலோ அரி­சிக்கு 65 ரூபாவை, அர­சாங்கம் வரி­யாக அற­வி­டு­கி­றது.

இதன் மூலம் அர­சாங்கம் குறைந்­த­பட்சம் 7 பில்­லியன் ரூபா­வுக்கும் மேல் வரு­மா­னத்தை பெற்­றி­ருக்­கி­றது.

இந்த வரு­மா­னத்தின் மூலம் சுங்கத் திணைக்­க­ளமும், இறை­வரித் திணைக்­க­ளமும் தங்­க­ளது, 2024ஆம் ஆண்­டுக்­கு­ரிய வரு­மான இலக்­கு­களை எட்டி இருக்­கின்­றன.

ஆனால், சாதா­ரண மக்­க­ளுக்கு அந்த அரிசி போய்ச் சேர­வில்லை. எல்லா இடங்­க­ளுக்கும் அரிசி விநி­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை. அரிசி விலை குறை­ய­வில்லை.

2022இல், கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­கடி இருந்த போது கூட, அரி­சியின் விலை 180 ரூபாவைத் தாண்­ட­வில்லை.

அந்தக் கால­கட்­டத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கத்தினால் குடும்­பத்­துக்கு 10 கிலோ அரிசி வீதம் இரண்டு முறை வழங்­கப்­பட்­டது.

ஆனால், இந்த அர­சாங்­கத்­தினால் நியா­ய­மான விலைக்கு அரி­சியைப் பெற்றுக் கொள்ள கொடுக்க முடி­ய­வில்லை.

இதற்கு அரிசி மாபி­யாக்கள் தான் காரணம் என்று அர­சாங்கம் குற்­றம்­சாட்­டு­கி­றது.

உள்­நாட்டு அரிசி உற்­பத்தி போது­மா­ன­ள­வுக்கு இருந்த போதும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கி­றது அல்­லது ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த சூழலை அர­சாங்கம் கையாண்ட முறை சரி­யா­ன­தாக இருந்­தி­ருந்தால், இந்த பிரச்­சி­னையை இல­கு­வாக தீர்த்­தி­ருக்க முடியும்.

உள்­நாட்டு உற்­பத்­தியைக் கொண்டும் பிரச்­சி­னையை தீர்க்க முடி­ய­வில்லை. வெளி­நாட்டு இறக்­கு­ம­தியின் மூலமும் பிரச்­சி­னையை தீர்க்­க­வில்லை.

மீசைக்கு ஆசை, கூழுக்கும் ஆசை என்ற அர­சாங்­கத்தின் நிலையே இதற்கு முக்­கிய காரணம்.

அரி­சியை இறக்­கு­மதி செய்து தட்­டுப்­பாட்டை போக்க வேண்டும் என எதிர்­பார்த்த அர­சாங்கம், வரியை தளர்த்­தி­யி­ருந்தால் விலையை குறைத்­தி­ருக்க முடியும்.

அரிசி மாபி­யாக்­க­ளையும், நட்­ட­ம­டையச் செய்­தி­ருக்க முடியும். தட்­டுப்­பாட்­டையும் போக்­கி­யி­ருக்க முடியும்.

ஆனால், வரியை தளர்த்­தாமல், அதனை அற­விட்டுக் கொண்டு இறக்­கு­ம­திக்கு அனு­ம­தித்த போது தட்­டுப்­பாடும் நீங்­க­வில்லை, விலையும் குறை­ய­வில்லை.

இந்த இரண்­டையும் சமா­ளிக்க கூடிய ஒரு முறையை அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கவும் முடி­ய­வில்லை.

உற்­பத்தி செய்­யப்­பட்ட அரி­சியின் விநி­யோ­கத்­தையும் சீர்­ப­டுத்த முடி­ய­வில்லை.

மொத்­தத்தில் அரிசி விவ­கா­ரத்தில் அர­சாங்கம் கடு­மை­யாக திணறிக் கொண்­டி­ருக்­கி­றது.

கோட்­டா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் இதே­போன்ற நிலையை முன்னர் எதிர்­நோக்­கி­யது.

உளுந்து, பயறு, சோளம், மஞ்சள் போன்­ற­வற்றின் இறக்­கு­ம­தியை தடை செய்து விட்டு அவற்றின் விலை மோச­மாக உயர்ந்த போது, அதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டது.

கட்­டுப்­பாட்டு விலை நிர்­ண­யிக்­கப்­பட்ட போதும், அது ஒரு போதும் நடை­மு­றைக்கு வர­வில்லை. அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

அரி­சிக்கு தட்­டுப்­பாடு வந்த போது, அரிசி களஞ்­சி­யத்­துக்கு சென்று கோட்­டாபாய் ராஜபக் ஷ விசா­ர­ணை­களை நடத்தி, ஊட­கங்­க­ளுக்கு படங்­க­ளையும் கொடுத்தார். ஆனால், கட்­டுப்­பாட்டு விலையை தீர்­மா­னிப்­பதில், நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அவரால் கடைசி வரை வெற்றி பெற முடி­ய­வில்லை.

பல்­வேறு பொருட்­க­ளுக்கு இதே நிலை ஏற்­பட்­டது. அதுதான் கோட்டா அர­சாங்கம் மீது மக்கள் மத்­தியில் அதி­ருப்­தியை விதைத்­தது.

தற்­போ­தைய அர­சாங்கம் அவ்­வா­றான நிலை வந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்தான் அரிசி இறக்­கு­ம­திக்கு அனு­மதி அளித்­தது.

தனி­யா­ரிடம் அரிசி, நெல் கையி­ருப்பு சிக்கி இருப்­பதால், அதை சரி­யாக மதிப்­பீடு செய்ய முடி­ய­வில்லை, விநி­யோ­கிக்க முடி­ய­வில்லை என அர­சாங்கம் சில வாரங்­க­ளுக்கு முன்னர் கூறி­யது.

அதனை அடிப்­ப­டை­யாக வைத்தே இறக்­கு­மதி செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யது.

ஆனால், யார் பதுக்­கு­கி­றார்கள் என்று குற்­றம்­சாட்­டி­யதோ, அதே தனி­யா­ருக்கு அரிசி இறக்­கு­ம­திக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது முட்­டாள்­தனம்.

அவர்­களும் அரி­சியை இறக்­கு­மதி செய்து கொண்டே இருக்­கி­றார்கள். ஆனால், அவை முற்று முழு­தாக சந்­தைக்கு வர­வில்லை. அர­சாங்கம் 230 ரூபா­வுக்கு கட்­டுப்­பாட்டு விலையை நிர்­ண­யத்­தி­ருந்­தாலும், சந்­தையில் 300 ரூபா­வுக்கும் கூட அரிசி விற்­கப்­ப­டு­கின்ற நிலை காணப்­ப­டு­கி­றது.

இந்த பொரு­ளா­தார நெருக்­கடி குறு­கிய காலத்தில் சமா­ளிக்­கப்­ப­டாது போனால், அது ஒரு நீண்­ட­கால பிரச்­சி­னை­யாக மாறும். அர­சாங்கம் எந்த ஒரு கட்­டத்­திலும், மக்­க­ளுக்­கான பொது விநி­யோ­கத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாமல் போகும்.

தனி­யா­ரிடம் அரிசி இருக்­கி­றதோ இல்­லையோ, அவர்கள் பதுக்­கு­கி­றார்­களோ இல்­லையோ, அதனை கண்­ட­றிந்து அந்தப் பிரச்­சி­னையை கையா­ளு­வ­தற்கு சரி­யான உபா­யத்தை வகுக்க வேண்­டி­யது அர­சாங்கம் தான். அதனை விட்­டு­விட்டு கடந்த கால அர­சாங்­கங்கள் செய்த தவ­றினால் தான், இந்த தட்­டுப்­பாடு ஏற்­பட்­டது என புலம்பிக் கொண்­டி­ருப்­பதில் இனி­மேலும் அர்த்தம் இல்லை.

ஏனென்றால், இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகப் போகி­றது.

கடந்த கால அர­சாங்­கங்­களின் கொள்­கை­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் திட்­டங்­க­ளையும் விமர்­சித்துக் கொண்­டி­ருப்­பது, மாற்று சிந்­தனை கொண்ட அர­சாங்­கத்­திற்­கான பண்­பாக இருக்க முடி­யாது.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒவ்­வொரு குடும்­பத்­துக்கு 20 கிலோ அரி­சியை வழங்­கி­யது தான், தட்­டுப்­பாட்­டுக்கு காரணம் என அமைச்சர் வசந்த சம­ர­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யி­ருக்­கிறார்.

அது எந்த வகை­யிலும் தட்­டுப்­பாட்­டுக்கு கார­ண­மாக முடி­யாது. ஒருவர் ஒரு நாளைக்கு சாதா­ர­ண­மாக உண்­ப­தற்கு எடுத்துக் கொள்ளும் அரி­சியைத் தான் உண்ண முடியும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரிசி கொடுத்த கால­கட்­டத்தில் அரிசி விற்­பனை குறைந்­தி­ருக்கும். அது தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­காது.

இதனைக் கூட புரிந்து கொள்ள முடி­யா­த­ள­வுக்கு, இந்த அர­சாங்­கத்தின் நிபு­ணத்­துவம் வாய்ந்த அமைச்­சர்கள் இருக்­கி­றார்கள்.

இந்த விட­யத்தில் மாத்­திரம் அல்ல, ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் பெய்ஜிங் பய­ணத்­திற்கு முன்­ன­தாக, அவ­சர அவ­ச­ர­மாக, சீனா­வுக்கு கோழி இறைச்­சியை ஏற்­று­மதி செய்­வ­தற்­கான நடை­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி அளித்து இருக்­கி­றது.

நாட்டில் உள்ள மக்கள் கோழி இறைச்­சியை 1,200 ரூபா­வுக்கு மேல் கொடுத்தே வாங்க வேண்­டிய நிலையில் இருக்­கி­றார்கள்.

முட்­டையை இந்­தி­யாவில் இருந்தே இறக்­கு­மதி செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் கோழி இறைச்சி ஏற்­று­ம­திக்கு அனு­மதி அளிக்­கப்­பட்டால், உள்­நாட்டில் தேவைக்கு ஏற்ப இறைச்­சியை பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய நிலை இருக்­குமா என்ற கேள்வி இருக்கிறது.

ஏற்றுமதி பொருளாதாரம் முக்கியமானது என்றாலும், அது உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான பொருட்களை வைத்துக் கொண்டே ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

ஆனால், இலங்கையில் அவ்வாறு நடப்பதில்லை. ஏற்றுமதிக்கு முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கழிவு பொருட்களே இங்கு சந்தைக்கு விடப்படுகின்றன.

இதனால் தரமான பொருட்கள் உள்ளூர் மக்களுக்கு கிடைப்பதில்லை. போதுமான அளவில் அவை கிடைப்பதில்லை. இது மக்களின் சுகாதாரம் ஊட்டச் சத்து போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எல்லா விடயங்களிலும் பொருளாதார அலகுகளை வைத்து தீர்மானங்களை எடுக்க முடியாது.

இந்த அரசாங்கம் அவ்வாறான ஒரு சிந்தனையில் தான் செயல்படுகிறது என்பதை உணர முடிகிறது.

மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை தேவைகளை கூட சீராக கிடைக்கக் கூடிய நிலையை உருவாக்க முடியாது போனால் இந்த அரசாங்கத்தினால் கொள்கை ரீதியான எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.

கார்வண்ணன் Virakesari

Share.
Leave A Reply