பாணந்துறையிலுள்ள மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மின் விநியோகத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்பகல் 11.23 மணி அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.