தீமா தீமா பாடல் பாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா
“விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தீமா தீமா பாடலுக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் lip sync செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram