கல்கிஸ்சை கடலில் நீராடுவதற்குச் சென்ற சிறுவன் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
கங்கொடவில பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த சிறுவன் தனது பெற்றோருக்குத் தெரிவித்துவிட்மு தனது நண்பர்களுடன் கல்கிஸ்சை கடலுக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், காணாமல்போன சிறுவனை தேடும் பணியில் கல்கிஸ்சை பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.