இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு பாலஸ்தீன எழுச்சியின் போது இவ்வாறான பேருந்து குண்டுவெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வேறு இரண்டு பேருந்துகளில் காணப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரியானவையாக குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் காணப்பட்டன என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெல்அவிக்கு வெளியே உள்ள பகுதியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

பயணத்தை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலேயே வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply