போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘ கணேமுல்ல சஞ்சீவ ‘ என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார்.
கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொலையின் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விளைவேயாகும். அவர் செய்ததாக அல்லது சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு குற்றச்செயல்கள் ஊடகங்களின் பல்வேறு பிரிவுகளினாலும் சமூக ஊடகங்களினாலும் வெளியிடப்பட்டதேயாகும்.
அந்த குற்றச்செயல்களில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக அல்லது திரிபுபடுத்தப்பட்டவையாக தோன்றுகின்றன. அவ்வாறு இருந்தாலும், கணேமுல்ல சஞ்சீவவின் கடந்த காலத்தின் எதிர்மறையான அம்சங்கள் தற்போதைய பின்புலத்தில் ஊடகங்களினால் குறைத்து மதிப்பிடக்கூடியவையோ அல்லது கவனிக்காமல் விடப்படக்கூடியவையோ அல்ல.
இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியமான ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்வதற்கு முன்னர் மேற்கொள்ப்பட்ட ஒரு சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவ சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அரசியல்வாதி வேறு யாருமல்ல, யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனேயாவார்.
கொழும்பில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு சஞ்சீவ உட்பட கொழும்பு பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் உதவியை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில பிரிவினர் உதவியை நாடினார்கள் என்ற அடிப்படையில் பொலிசார் அன்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஒரு குறிப்பிட்ட காலம் தடுப்புக்காவலில் இருந்த பிறகு கணேமுல்ல சஞ்சீவவும் மற்றையவர்களும் அவர்களுக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சுமந்திரன் தொடர்பான விவகாரத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது. சுமந்திரனுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஊடகப் பிரசாரம் ஒன்றே கணேமுல்ல சஞ்சீவ — சுமந்திரன் கதையின் மீது கவனம் மீண்டும் திரும்பியதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.
நடந்தது இதுதான். 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 2024 தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.
குறைக்கப்பட்ட பாதுகாப்பு
ஜனாதிபதி அநூரா குமார திசாநாயக்கவும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அமைச்சர்களுக்கும் ஏனைய அதிமுக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்து இரு பாதுகாப்பு அதிகாரிகளை வழங்கும் நடைமுறையும் நிறுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது. ஆனால், பொதுப் பாதுகாப்பு அமைச்சு சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் மதிப்பீடு ஒன்றைச் செய்து அதன் பிரகாரம் அவர்கள் ஒவ்வொருக்கும் இரு பொலிஸ் மெய்க்காவலர்களை அனுமதித்தது.
முன்னாள் அமைச்சர்கள் ரிறான் அலஸ், டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர். முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் பாதுகாப்புக்கும் இரு அதிகாரிகள் வழங்கப்பட்டனர்.
தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினான சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சாணக்கியன் விடயத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடொன்றை தொடர்ந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சே தீர்மானத்தை எடுத்தது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரான சிறீதரன் தனக்கு பாதுகாப்பைக் கோரியதையடுத்தும் ஜனாதிபதி திசாநாயக்கவுடனான நேரடிச் சந்திப்புக்கு பின்னரும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தனக்கு வளங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவில் இருந்து தன்னுடன் நீணடகாலமாக பணியாற்றிய பொலிஸ் மெய்க்காவலர் நீக்கப்பட்டதை சிறிதரன் ஆட்சேபித்ததாக கூறப்படடது.
இலங்கையின் தற்போதைய தமிழ் அரசியல் சுமந்திரனைச் சுற்றிச் சுழல்வதாகவே இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் அரசியல் சுமந்திரனை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் ஒரு விவகாரமாக இருப்பதாக இலங்கை விவகாரங்களை நீண்டகாலமாக அவதானித்துவரும் இந்திய அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார்.
அத்தகைய ஒரு பின்புலத்தில், சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து பிரச்சினை கிளப்பியிருக்கின்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை அலட்சியம் செய்யும் இந்த சக்திகள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுடன் சுமந்திரனுக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் காரணமாகவே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று விசமத்தனமான பிரசாரம் ஒன்றை செய்து வருகின்றன.
இந்த பிரசாரத்தை எதிர்க்கும் சுமந்திரனின் விசுவாசிகளும் ஆதரவாளர்களும் அரசாங்கம் பாதூகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சுயாதீனமான மதிப்பீடு ஒன்றைச் செய்த பின்னரே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள். சுமந்திரனை கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாறு இருப்பதையும் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். கணேமுல்ல சஞ்சீவவின் கொலை அவரின் கடந்தகால செயற்பாடுகள் அல்லது தவறான நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதனால், சுமந்திரனை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியில் கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு குறித்து பெருமளவு ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல வாசகர்கள் என்னிடம் விசாரித்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் சஞ்சீவவை நீதிமன்றம் விடுதலை செய்தபோது நான் அது பற்றி அந்த நேரத்தில் விரிவாக எழுதினேன். அதனால் அன்று என்ன நடந்தது என்பதை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் மீட்டுப்பார்க்க விரும்புகிறேன்.
இரகசியப் பொலிஸ் விசாரணை
கொழும்பு பாதாள உலக உறுப்பினர்களும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளும் சம்பந்தப்பட்ட மோசடி ஒன்று தொடர்பாக பொலிஸ் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தது.
விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் ஆயுதக்கிடங்குகளை தோண்டி துப்பாக்கிகளையும் வெடிபொருட்களையும் களைமோர் கண்ணி வெடிகளையும் எடுத்து கொழும்பில் உள்ள வன்முறைக் குய்பல்களுக்கு அவற்றை விற்பனை செய்வதாகச் சந்தேகிக்கப்பட்டது.
விடுதலை புலிகளுடனான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்த நிலையில் குற்றவியல் புலனாய்வு பிரிவு பயங்கரவாத விசாரணைப் பிரிவையும் விசாரணைகளுக்குள் சேர்த்துக் கொண்டது.
வத்தளையில் இருந்த விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டமை இந்த விசாரணைகளில் ஒரு ஆரம்பக்கட்ட முன்னேற்றமாக அமைந்தது. அவரின் பெயர் கணபதி கதிரவேலு. அவர் மீதான தீவிர விசாரணையின் விளைவாக புதிய துப்புக்கள் கிடைத்தன.
தமிழரசு கட்சியான யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரனை கொழும்பில் வைத்து கொலை செய்வதற்கு சதித்திட்டம் ஒன்றை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த சில விடுதலை புலிகள் உறுப்பினர்கள் தீட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவந்தது.
இதற்காக அவர்களன் பாதாள உலகக் கும்பல்களைச் சேர்ந்த சிலரை அணுகினார்கள். உயர்ந்த மாடிக்கட்டிடம் ஒன்றின் பல்கணியில் இருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் சுமந்திரனைக் கொலை செய்வதே நோக்கம்.
அப்போதுதான் அந்த சதத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவராக கணேமுல்ல சஞ்சீவவின் பெயரும் வெளியில் வந்தது.
முன்னாள் விடுதலை புலிகளுடனும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அந்த இயக்க உறுப்பினர்களுடனும் ஆயுத வியாபாரத்தில் சஞ்சீவ ஈடுபட்டிருந்தார் என்பது அம்பலத்துக்கு வந்தது.
முன்னதாக சஞ்சீவ கொந்தராத்துக் கொலைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் மிரடடிப் பணம் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்ட போதிலும், அரசியல் கொலைகளில் அவர் சம்பந்தப்பட்டதாக அறிய வரவில்லை. இந்த தகவல் வெளியானபோது கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் சஞ்சீவ விளக்கமறியலில் இருந்தார்.
கணேமுல்ல சஞ்சீவவை கைதுசெய்த குற்றவியல் புலனாய்வு பொலிசார் சுமந்திரனை கொலை செய்வதற்கு சதிசெய்ததாக சந்தேகத்திலும் ஆயுதங்களை சட்டவிரோதமாக கடத்தி விற்பனையில் ஈடுபட்டமைக்காகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யத் தொடங்கினர். சஞ்சீவ மீதான விசாரணையின் விளைவாக மேலும் பல பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பன்னிரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 பேரும் கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் லங்கா ஜெயரத்ன ( B/ 6284/ 01/ 19) முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் இருந்த பெயர்களின் பிரகாரம் 11 பேர் சிங்களம் பேசுபவர்கள், 4 பேர் தமிழ் பேசுபவர்கள்.
15 பேர்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட 15 பேரினதும் பெயர்கள் வருமாறு ; 1) இராசலிங்கம் சிவராஜ், 2) கல்யாணகுமார சசிகுமார, 3) ஜி.பி.எம்.பி. கவிந்த பத்திரன, 4) கே.கே.எம்.டி. விஜய சிறிவர்தன, 5) கே.பி.ஐ.ஆர். கருணாநாயக்க பத்திரன, 6) எம்.டி. நிமால் ஹர்ஷன, 7) எம்.கே பிரதீப் தேசப்பிரிய, 8) ஏ. பிரபாகர் விக்கிரமசிக்க,9) எவ்.எஸ். ஜொனாதன் டட்லிலி, 10) டபிள்யூ. ஜூட் நிரோஷன், 11) டபிள்யூ. சலான் குமார, 12) கணபதி கதிரவேலு, 13) கே. உதேசித்த விதுரங்க, 14) ஆர்.ஏ. அமில நுவான், 15) கணேமுல்ல சஞ்சீவ அல்லது மாலிங்கமுவ சஞ்சீவ என்ற சஞ்சீவ சமரரத்ன.
‘ பிலாவ ‘ சித்திரைப் புத்தாண்டுக்கு இரு நாட்கள் முன்னதாக கொழும்பு பிரதம மாஜஸ்திரேட் ஸ்ரீ ராகல (2019 ஆம் ஆண்டின் முற்பகுதிரில் இருந்து) இரு வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்த பதினொரு சந்தேக நபர்களையும் விடுதலை செய்தார்.
அவர்களில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவும் அடங்குவார். சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்துக்காகவும் வேறு குற்றச்சாட்டுக்களின் பேரிலும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறு பத்துப் பேரும விடுதலை செய்யப்பட்டனர்.
சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்துடன் சேர்த்து, வடக்கில் விடுதலை புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் கண்ணிவெடிகள், ரி — 56 ரைபிள்களை தோண்டியெடுத்து அவற்றை கொழும்புக்கும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் கடத்திவந்து பாதாள உலகப் புள்ளிகளுக்கு விற்பனை செய்தது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்த 15 சந்தேகநபர்களில் 11 பேருக்கு எதிராக விசாரணைகளைத் தொடருவதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று சட்டமா அதிபர் தெரியப்படுத்தியிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து அவர்களை கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் புத்திக்க ஸ்ரீ ராகல விடுதலை செய்தார்.
பதினொரு பேருக்கும் எதிராக வழக்குத் தொடுப்பதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று அன்றைய சட்டமா அதிமர் தப்புல டி லிவேரா பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார். மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் எதிராக அண்மைய எதிர்காலத்தில் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சட்டமா அதிபர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆனால், மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்ல. அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
ஆனால், நான் கூறுவது சரியான தகவல் இல்லை என்றால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கணேமுல்ல சஞ்சீவவை பொறுத்தவரை, சுமந்திரனுடன் தொடர்பில்லாத வேறு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
கணேமுல்ல சஞ்சீவவும் ஏனைய பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்ட போதிலும், சமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் தனியான விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவு தொடர்ந்து நடத்தியது என்பது கவனக்கத்தக்கது.
தனியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்தன. ஆனால், சஞ்சீவ அந்த விசாரணைகளின் அல்லது வழக்கின் ஒரு அங்கமாக இருக்கவில்லை.
சதிமுயற்சி கண்டுபிடிப்பு
சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட மேற்குறிப்பிட்ட சதித்திட்டத்தின் விபரங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிசாரே.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அன்றைய பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சல்வா தானே அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்து தனது அதிகாரிகளை வழிநடத்தினார்.
தீவிர விசாரணைக்குப் பிறகு 2016 டிசம்பர் 23 ஆம் திகதி சுமந்திரனுக்கு எதிரான சதி தொடர்பிலான உறுதியான சான்றுகள் பயங்கரவாத விரசாரணைப் பிரிவுக்கு கிடைத்தன. விசாரணைகள் தொடர்ந்தன. கைதுகளும் இடம்பெற்றன.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கண்டறியப்பட்ட தகவலின் பிரகாரம் சுமந்திரனை இலக்கு வைத்து மூன்று தடவைகள் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களின் விளைவாக அவர்களின் கொலை முயற்சிகள் தோல்விகண்டன.
மூன்று சந்தர்ப்பங்களிலுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பி — 402 சொரணப்பற்று — தாளையடி வீதியில் சுமந்திரன் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வெடிகருவிகளைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்வதற்கே முயற்சிக்கப்பட்டது.
மருதங்கேணிக்கு அவர் போய்வந்து கொண்டிருந்தார். சந்தேகநபர்கள் கைது செய்யப்டும்வரை தனக்கு எதிரான மூன்று கொலை முயற்சிகள் பற்றியும் சுமந்திரனுக்கு எதுவும் தெரியாத
கொழும்பு மேல் நீதிமன்றம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மருதங்கேணி பகுதியில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட சதிமுயற்சி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதல் தடவையாக 2017 ஜனவரியில் விசேட அதிரடிப்படை யின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அந்த சதித்திட்டம் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரமான புலிகள் இயக்க பிரகிருதிகளினால் தீட்டப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேருக்கு ( ஒருவர் இல்லாமலேயே ) எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ( HC/ 242/ 2018 ) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மருதங்கேணி சதிமுயற்சி என்று கூறப்பட்ட அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரின் பெயர்கள் வருமாறு ; 1) சோலை குமரன் அல்லது மாஸ்டர் என்ற காராளசிங்கம் குலேந்திரன், 2) கடலன் அல்லது ஜனா என்ற மரியநாயகம் அஜந்தன், 3) வேந்தன் என்ற முருகையா தேவேந்திரன், 4) மதன் அல்லது பரதன் என்ற முருகையா தேவேந்திரன்.
காந்தன் அல்லது வெற்றி என்ற மகாத்மாஜி அனோஜன் என்பவரே ஐந்தாவது பிரதிவாதி. அவுஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை இடம்பெற்றது.
கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஒரு கணிசமான காலமாக வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சுமந்திரன் சாட்சியமளித்தார். ஒரு சில அவுஸ்திரேலிய வாசிகளும் சாட்சியம் அளித்தனர். விசாரணை மந்தகதியில் நடைபெற்று வருகின்ற போதிலும், வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தீர்ப்பு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம்.
மருதங்கேணி சதிமுயற்சி
சுமந்திரனை கொலை செய்வதற்கான இந்த மருதங்கேணி சதி முயற்சிககு புறம்பாக, வேறுபட்ட நேரங்களில் அவரை இலக்கு வைத்து வேறுபல சதி முயற்சிகளையும் பொலிசார் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் வ ன்முறை நடவடிக்கைகள் ஊடாக இலங்கையில் விடுதலை புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியுமே ஒரு இலக்காக சுமந்தி ரனை ” “சம்பந்தப்படுத்துவதாகவே ” இருந்திருக்கின்றது.
முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கொலைச்சதி முயற்சிகளில், இலக்குகளாக டக்ளஸ் தேவானந்தா அல்லது ‘கேணல்’ கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனே இலக்குகள் என்று தவறாக கருதப்பட்டது. ஆனால், உண்மையான இலக்கு சுமந்திரனே என்று தெரிந்துகொண்டபோது விசாரணையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
வெளிநாடுகளால் வாழும் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் ( அவர்களில் பலர் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பெருமளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள் )
இலங்கையில் பணக்கஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளுக்கு நிதியுதவியைச் செய்வதன் மூலமாக சுமந்திரனை கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இது தொடர்பில் பல வருடங்களாக சந்தேகத்தில் பலர் கைதுசெய்யப்பட்டு புலனாய்வாளர்களினால் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்புக்கு புறம்பாக, சுமந்திரனின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களும் வழங்கப்பட்டிருந்தார்கள்.
அவரைக் கொலை செய்வதற்கான சதிமுயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே அவ்வாறு செய்யப்படடது. பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சுமந்திரனுக்கு நம்பகமான உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால், கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் விவகாரத்தை மெத்தனமான முறையில் நோக்கினார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
விசேட அதிரடிப்படை பாதுகாப்பு
சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு முதல் தடவையாக 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தான் வழங்கப்பட்டது. 52 நாள் அரசியலயைப்புச் சதியின்போது 2018 நவம்பரில் அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்ட்டது.
மீண்டும் அவருக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு 2019 மார்ச்சில் வழங்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பிறகு 2019 நவம்பரில் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
2020 ஜனவரியில் மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2020 பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது அந்த பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது.
மீண்டும் 2021 பெப்ரவரியில் சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவின் இந்த நடவடிக்கை பலரின் கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால், மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
எந்தவொரு கட்டத்திலுமே தனக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் தானாக வேண்டுகோள் விடுத்ததில்லை. அவருக்கு பயங்கரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று இருந்ததன் காரணத்தால் சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கமும் கோட்டாபய — மகிந்த அரசாங்கமுமே விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்கின. அவருக்கு விசேட அதிரடிப்படை ப்துகாப்பை வழங்குவதும் பிறகு விலக்கிக் கொளாவதும் எப்போதுமே முற்றிலும் அரசாங்கத்தின் தீர்மானமாகவே இருந்து வந்திருக்கிறது.
சரத் வீரசேகர
2021 ஜனவரியில் கோட்டாபய அரசாங்கத்தின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் சுமந்திரனைச் சந்திக்க விரும்புவதாக ஒரு செய்தியை அவருக்கு அனுப்பினார்.
இருவரும் சந்தித்தபோது அண்மைய அச்சுறுத்தல் மதிப்பீடு பற்றியும் சுமந்திரனின் பாதுகாப்புக்கு கூடுதல் அச்சுறுத்தல் பற்றியும் விரசேகர அறிவித்தார். சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்படவேண்டும் என்று சிலர் ஆர்வப்படுகின்ற ஆர்வப்பட்ட போதிலும் கூட அது அகற்றப்படமாட்டாது என்று அமைச்சர் அவருக்கு உறுதியளித்தார். ஆனால், ஒரு மாதம் கழித்து 2021 பெப்ரவரி முற்பகுதியில் சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை முன்னறிவித்தல் எதுவுமின்றி அதே வீரசேகர நீக்கினார்.
மேலும், சுமந்திரனுக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்ற போதிலும் அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார். சுமந்திரன் முக்கிய பங்கு வகித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட ” பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை ” பாதயாத்திரை கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆத்திரமடைய வைத்திருக்கிறது போன்றே தோன்றியது.
அந்த பாதயாத்திரை முடிவடைந்த பிறகு, சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படை பிரிவின் தலைமை அதிகாரி அவரை அணுகி அந்த பாதுகாப்பை மேலும் வழக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்ட காரணத்தால் திரும்பி வருமாறு தனது உயரதிகாரிகள் தனக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார். இந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம் குறித்து சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரைப் பற்றி விளக்கமளித்து அது அமைதியாக நடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டிய சுமந்திரன்,” இந்த பாதயாத்திரை முடிவடைந்ததும் எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு அகற்றப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்குவது பற்றி தானாக எவரிடமும் முறையிட்டதில்லை என்றும் தனக்கு அச்சுறுத்தில் இருப்பதாகக் கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது என்றும் பாராளுமன்றத்தில் சுமந்திரன் கூறினார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எதற்காக நடத்தப்பட்டது என்பதைப் பற்றி விளக்கிக் கூடிய சுமந்திரன் அது மிகவும் அமைதியான முறையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.” எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரை முடிவடைந்த உடனடியாக நீக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்குவது பற்றி நானாக எவரிடமும் முறையிட்டதில்லை. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது” என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.
மூன்று அவதானங்கள்
விபரங்கள் அடங்கிய கோவை ஒன்றை காட்டிப் பேசிய சுமந்திரன் தனக்கு எதிரான முயற்சிகள் குறித்து கொழும்பு மேல்நீதிமன்றத்திலும் பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான விபரங்கள் அதில் இருப்பதாகவும் சிங்கள பாதாள உலக கும்பலின் உறுப்பினர்கள் உட்பட முப்பதுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் இருப்பதாகவும் கூறினார்.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கம் அறிவித்ததே என்று குறிப்பிட்ட சுமந்திரன் தனக்கு அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது என்றால் எதற்காக அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பை விலக்கிக்கொணடது என்று கேள்வியெழுப்பினார். மூன்று அவதானிப்புகளையும் அவர் முன்வைத்தார்.
முதலாவதாக, தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதற்கு மத்தியிலும் விசேட பாதுகாப்பை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்றால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பாதயாத்திரையில் தான் பங்கேற்றுக் கொண்டதால் அது ஆத்திரம் அடைந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இரண்டாவதாக, உண்மையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றால், அரசாங்கம் முப்பதுக்கும் அதிகமான அப்பாவி நபர்களை கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிடடார்.
மூன்றாவதாக, விசேட பாதுகாப்பை நீக்கிய செயல் தனக்கு ஆபத்தை விவைிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு சமிக்ஞயைக் காண்பிக்கும் கெடுதியான நோக்கத்தைக் கொண்டிருக்கக் கூடும் என்று அவர் கூறினார். இறுதியாக அவர், ” என்க்கு இடர்பாடான எதுவும் ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று அவர் சபையில் கூறினார்.
இதைத் தொடர்ந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர, சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தனது உத்தரவின் பேரிலேயே நிக்கப்பட்டதாக ‘ஹிரு’ தொலைக்காட்சிக்கு கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக்கொண்ட போதிலும், சமந்திரன் போராட்டம் ஒன்றில் பங்கேற்ற நிலையில், அவருக்கான விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது நீக்கப்பட்டது என்றும் வீரசேகர கூறினார்.
” சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருக்கக் கூடாது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவரும் பொலிஸ் பாதகாப்புக்கு சுமந்திரனும் உரித்துடையவர் என்பதால் அது அவருக்கு தொடர்ந்து வழங்கப்படும் ” என்று சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
சுலபமான இலக்கு
2024 பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தோல்வி கண்டதையடுத்து அவருக்கான பொலிஸ் பாதுகாப்பும் முடிவுக்கு வந்தது. ஆனால், முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான அச்சுறுத்தல் மதிப்பீடு ஒன்றையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா ரிறான் அலஸ், பிள்ளையான் போன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சுமந்திரனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் அவருக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்த பிரசாரம் சுமந்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பை இலாலாமல் செய்து அவரை கொலையாளிகளின் இலகுவான இலக்காக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கொடிய திட்டமாகவும் கூட இருக்கலாம்.
இத்தகைய பின்புலத்திலேயே, கடந்த காலத்தில் சுமந்திரனை கொலை செய்வதற்கான ஒரு சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு தொடர்பில் தற்போது ஆர்வம் காண்பிக்கப்படுகிறது.