பத்தேகம பொலிஸ் பிரிவின் ஏத்கந்துர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை (27) இரவு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பத்தேகம பொலிஸாரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

எத்கந்துர பகுதிகளில் வசிக்கும் 33 மற்றும் 36 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே பலியாகியுள்ளனர்.

சடலங்கள் காலி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் காலி மற்றும் எல்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply