“மகாராஷ்டிரா மாநிலத்தில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய ஓட்டுநரின் செயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்டூர்-நான்டெட் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பைக் ஓட்டி வந்த ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திரும்பியுள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 முதல் 20 பேர்வரை காயமடைந்தனர்.

Share.
Leave A Reply