நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும்.

ஏனைய 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்டவை ஆகும்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 68 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரி – 56 ரக துப்பாக்கிகள் 6 கைப்பறற்ப்பட்டுள்ளன.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் , 2 வேன்கள் மற்றும் 2 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply