காசா மீது மீண்டும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை அந்த பயங்கரமான தருணங்களை காசா மக்கள் ஊடகங்களிற்கு விபரித்துள்ளனர்
16 விமானங்கள் தலைக்கு மேலே காணப்பட்டன, பலர் தங்கள் குழந்தைகளின் உடல்களை தூக்கியவாறு மருத்துவமனைக்கு வந்தனர் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் காசாவின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் சத்தத்தை கேட்டு அச்சத்துடன் கண்விழித்தோம் என ஆசிரியர் அகமட் அல் ரிஸ்க் அல் ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.
குண்டுவீச்சின் ஆரம்ப தருணங்களை பகிர்ந்துகொண்டுள்ள அவர் நாங்கள் அஞ்சிநடுங்கினோம் எங்கள் பிள்ளைகளும் அஞ்சி நடுங்கின பல உறவுகள் எங்களின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக எங்களை தொடர்புகொண்டார்கள், அம்புலன்ஸ்கள் ஒரு வீதியிலிருந்து மற்றைய வீதிக்கு ஒடத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளின் உடல்களை கையில் சுமந்தபடி குடும்பங்கள் மருத்துவமனைக்கு வரத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் தலைக்கு மேலே 16 போர்விமானங்களும் ஆளில்லா விமானங்களும் காணப்பட்டன நாங்கள் பெரும் அச்சத்தில் சிக்குண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனைகள் முற்றாக செயல் இழந்து காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே காசாவின் சுகாதார கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்துள்ள நிலையிலேயே இந்த தொடர்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்
ஐந்து செகன்டிற்கு ஒரு வெடிப்பு சத்தம் கேட்பதாக ஐநாவின் பணியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் ரொசாலியா பொலொன் தென்காசாவின் அல்மவாசியில் உள்ளார்.
இது அனைவருக்கும் மிகவும் கடினமான இரவு என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
பாரிய வெடிப்பு சத்தங்கள் காரணமாக நான் கண்விழித்தேன்,நான் தங்கயிருந்த வீடு குலுங்கியது,அடுத்த 15 நிமிடங்கள் நாங்கள் ஒவ்வொரு ஐந்து செகன்டிற்கும் ஒரு வெடிப்புச்சத்தங்கள் என்ற அடிப்படையில் வெடிப்பு சத்தங்களை கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளியே அலறல்களையும் அம்புலன்ஸ் சைரன்ஸ்களையும் கேட்டதாக தெரிவித்துள்ள அவர் தலைக்கு மேலே விமானங்களின் இரைச்சல் கேட்டது என தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான பொருட்கள்,எரிபொருட்கள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விநியோகத்தினை நிறுத்தி மின்சார விநியோகத்தினை நிறுத்திய பின்னரே இந்த தாக்குதல்கள்இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
15 மாதங்களிற்கு முன்னரே சுகாதாரசேவையை முற்றாக அழித்துவிட்டனர் என தெரிவித்துள்ள அவர்நான் பேசிய சிறுவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் அதிர்ச்சியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
காசாவில் பணிபுரியும் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் இஸ்ரேல் மீண்டும் வான் வழித்தாக்குதலை மேற்கொண்டவேளை தான் பார்த்த முழுமையான படுகொலை மற்றும் அழிவு குறித்து ஸ்கை நியுசிற்கு தெரிவித்துள்ளார்.
டெய்ர் அல் பலாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பெரோஸ் சித்வா இஸ்ரேலின் புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நான் ஆறு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டேன், இவர்களில் சிலர் ஆறுவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் துரதிஸ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிரிழக்கப்போகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இது பேரழிவு , கூடாரங்கள்மீதுகுண்டுகளை வீசினால் இதுவே நடக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தாலும் அமெரிக்காவின் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிடும்,மரதன் குண்டுவெடிப்பின் போது நான் அங்கிருந்தேன் அங்கு பெரும் குழப்பம் நிலவியது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அன்று பார்த்தது காசாவில் இன்று நான் பார்த்தன் சிறிய அளவே என அவர் தெரிவித்துள்ளார்.