யாழ். தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தெல்லிப்பழை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்றனர்.

இதன்போது, சந்தேகநபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து, பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.

Share.
Leave A Reply