1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 60 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த தேர்தல் தமிழ் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் உடன்படிக்கை ஒனறை கைச்சாத்திட்ட பிறகு ( டட்லி – செல்வா உடன்படிக்கை ) பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையில் ஏழு கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இந்த கட்டுரை 1965 மார்ச் தேர்தலை பற்றியும் அதற்கு பிறகு நடந்தவை பற்றியும் விபரிக்கிறது.
அன்றைய பாராளுமன்றம் மக்களால் தெரிவு செய்யப்படும் 151 உறுப்பினர்களையும் ஆறு நியமன உறூப்பினர்களையும் கொண்டதாக இருந்தது. 1965 மார்ச் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது எந்தவொரு கட்சிக்கும் அதன் சொந்தத்தில் சாதாரண பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி 1,590,929 ( 39.31 சதவீதம் ) வாக்குகளைப் பெற்று 66 ஆசனங்களை கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1,221, 437 ( 30.18 சதவீதம் ) வாக்குகளுடன் 41 ஆசனங்களைப் பெற்று இரணாடாவது பெரிய கட்சியாக வந்தது. இலங்கை தமிழரசு கட்சி 14 ஆசனங்களை கைப்பற்றி மூன்றாவதாக வந்தது. அதற்கு 216, 914 ( 5.38 சதவீதம் ) வாக்குகள் கிடைத்தன. லங்கா சமசமாஜ கட்சி 302, 095 ( 7.4 சதவீதம்) வாக்குகளுடன் பத்து ஆசனங்களைப் பெற்ற அதேவேளை, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 109, 754 (2.71 சதவீதம் ) வாக்குகளுடன் நான்கு ஆசனங்களை தனதாக்கியது.
ஆசனங்களை பெற்றுக்கொண்ட மற்றைய கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர சோசலிஸ்ட் கட்சியும் ஒன்று அது 130, 429 வாக்குகளுடன் ஐந்து ஆசனங்களைப் பெற்றது. இந்த சுதந்திர சோசலிஸ்ட் கட்சி சி.பி.டி. சில்வா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்த குழுவினரும் டபிள்யூ. தகநாயக்கவின் பிரஜாதந்திரவாதி பக்சயவும் (ஜனநாயக கட்சி) சேர்ந்து அமைத்த ஒரு கூட்டு ஆகும்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 98, 746 ( 2.44 சதவீதம் ) வாக்குகளுடன் மூன்று ஆசனங்களை பெற்றது.பிலிப் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியும் கே.எம்.பி. ராஜரத்ன தலைமையிலான ஜாதிக விமுக்தி பெரமுனவும் ஒரு பொது முன்னணியை அமைத்து கூட்டாக போட்டியிட்டன. பிலிப் குணவர்தனவும் குசுமா ராஜரத்னவும் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர, 1965 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்ட ஆறு பேரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். எம்.ஏ. அப்துல் மஜீத் (பொத்துவில் ), பிறின்ஸ் குணசேகர (ஹபராதுவ), எம்.எஸ். காரியப்பர் (கல்முனை ), பேர்ஸி சமரவீர ( வெலிமடை ) மற்றும் முதியான்சே தெனானக்கோன் ( நிக்கவரெட்டிய ) ஆகியோரே அவர்களாவர்.
கட்சிகளுக்கு கிடைத்த ஆசனங்களின் அடிப்படையில் அரசியல் நிலைவரத்தை நோக்கியபோது 66 ஆசனங்களை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி சுதந்திர சோசலிஸ்ட் கட்சி அணியின் ஐந்து உறுபாபினர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நம்பியது. ஐக்கிய தேசிய கட்சியினால் பெரும்பான்மை ஒன்றை காட்டமுடியுமானால் மக்கள் ஐக்கிய முன்னணி – ஜாதிக விமுக்தி பெரமுன கூட்டு ஆதரவை வழங்கக்கூடும் என்ற நிலை இருந்தது.
ஆறு சுயேச்சை உறுப்பினர்களில் மூவர் ( அப்துல் மஜீத், காரியப்பர் மற்றும் சமரவீர ) ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயாராயிருந்தனர். அதனால், தெரிவு செய்யப்பட்ட 151 பாராளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 76 பேரின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கக்கூடிய சாத்தியம் இருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க பிரதமராக வந்தால் ஆறு நியமன உறுப்பினர்களுடன் சேர்த்து அரசாங்க தரப்பு உறுப்பினர்களின் தொகை 172 ஆக இருக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக வந்தாலும் , டட்லி சேனநாயககவுக்கு ஆறு பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கும். இது தவிர, மூன்று ஆசனங்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸும் அவசியமானால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயாராயிருந்தது.
மறுபுறத்தில், 41 ஆசனங்களைக் கொண்டிருந்த சுதந்திர கட்சி சமசமாஜ கட்சியினதும் (10) கம்யூனிஸ்ட் கட்சியினதும் (4) ஆதரவை பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது. இது சுதந்திர கட்சி — சமசமாஜ கட்சி — கம்யூனிஸ்ட் கட்சி கூட்டுக்கு மொத்தம் 55 ஆசனங்களை கொடுத்தது. சுயேச்சை உறுப்பினர்களான ஆர்.ஜி. சேனநாயக்க, பிறின்ஸ் குணசேகர, ” பொடி புத்தா ” முதியான்சே தென்னக்கோன் ஆகியோரின் ஆதரவு அந்த எண்ணிக்கையை 58 ஆக உயர்த்தியது. தமிழரசு கட்சியும் சிறிய கட்சிகளும் சுதந்திர கட்சி – சமசமாஜி – கம்யூனிஸ்ட் கூட்டுக்கு ஆதரவு வழங்காத பட்சத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
அதிகாரச் சமநிலை
தேர்லுக்கு பின்னர் நிலவிய பாராளுமன்ற எண்கணிதம் 14 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழரசு கட்சியிடமே அதிகாரச் சமநிலை இருந்தது என்பதை வெளிக்காட்டியது. தமிழரசு கட்சி இதரவளித்தால் டட்லி சேனநாயக்கவினால் சுலபமாக பெரும்பான்மை ஒன்றைப் பெறக்கூடியதாக இருக்கும். ஐக்கிய தேசிய கட்சியும் (66) தமிழரசு கட்சியும் (14) சேர்ந்தால் ஆசனங்களின் எண்ணிக்கை 80 ஆகும். நியமனமாகும் ஆறு பாராளுமன்ற உறுபனபினர்களையும் சேர்த்தால் 157 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கம் 86 ஆசனங்களை கொண்டிருக்கும். சுதந்திர சோசலிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிக விமுக்தி பெரமுன மற்றும் தமிழ் காங்கிரஸின் ஆதரவு தேவைப்படாது.
அதே போன்றே, தமிழரசு கட்சி திருமதி பண்டாரநாயக்கவின் சுதந்திர கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தால் அவரின் கை உறுதியாகப் பலப்படுத்தப்படும். சுதந்திர கட்சி — சமசமாஜி — கம்யூனிஸ்ட் கூட்டின் 55 ஆசனங்களுடன் தமிழரசு கட்சியின் 14 ஆசனங்களைச் சேர்த்தால் 69 ஆசனங்களாகும்.
சுயேச்சை உறுப்பினர்களில் மூவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். சுதந்திர கட்சியின் புதிய அரசாங்கம் ஒன்றுக்கு ஆதரவு அளிக்குமாறு ஏனைய இரு சுயேச்சை உறுப்பினர்களை இணங்கவைக்கக் கூடியதாக இருக்கும். திருமதி பண்டாரநாயக்க மீண்டும் பிரதமராக பதவியேற்று ஆறு நியமன உறூப்பினர்களையும் நியமிப்பாராக இருந்தால் சுதந்திர கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 157 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 80 ஆசனங்கள் இருக்கும்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகு மார்ச் 23 ஆம் திகதி டட்லி சேனநாயக்க மகாதேசாதிபதி வில்லியம் கோபல்லாவவை சந்திக்கச் சென்றபோது தமிழரசு கட்சியின் முக்கியத்துவம் அவருக்கு உணர்த்தப்பட்டது. பதவியில் இருக்கும் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க இன்னமும் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளிக்கவில்லை என்பதை கோபல்லாவ சேனநாயக்கவுக்கு தெரியப்படுத்தினார்.
கூடுதலான ஆசனங்களைக் கொண்ட தனியான ஒரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி இருக்கின்ற போதிலும், உறுதியான ஒரு பெரும்பானமையை அது பெறவேண்டியது அவசியம் என்று டட்லி சேனநாயக்கவுக்கு மகாதேசாதிபதி கூறினார். உறுதியான பெரும்பான்மை இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு தமிழரசு கட்சி போன்ற ஏனைய கட்சிகளின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி பெறவேண்டும் என்று அவர் யோசனையும் கூறினார்.
இத்தகைய பின்புலத்தில், தமிழரசு கட்சி அதன் 14 ஆசனங்களையும் வைத்துக்கொண்டு டட்லி சேனநாயக்கவை ஆதரிப்பதன் மூலமாக ஒன்றில் ” கிங் மேக்கராக ” அல்லது சிறிமா பண்டாரநாயக்கவை ஆதரிப்பதன் மூலம் ” குயின் மேக்கராக ” வரமுடியும் என்பது தெளிவாகத் தெரிந்தது. அத்தகைய இஎஒரு சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தமிழரசு கட்சியின் தலைலர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் வருகை இரு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தலுக்கு முன்னதாகவே தமிழரசு கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடங்கியிருந்தன எனபது பலரும் அறிந்திராத உண்மை. எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியாமல் ஒரு ” தொங்கு ” பாராளுமன்றமே அமையும் என்று எதிர்பார்க்க்கப்பட நிலையில் உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தமிழரசு கட்சியின் ஆதரவின் அவசியத்தை உணர்ந்து அதனுடன் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் ” உத்தியோகபூர்வமற்ற ” பேச்சுவார்த்தைகளை தேர்தல் பிரசார காலத்திலேயே ஆரம்பித்திருந்தன.
முருகேசு திருச்செல்வம்
தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகமும் ஏனயை மூத்த தலைவர்களும் வடக்கிலும் கிழக்கிலும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் பூர்வாங்க பேச்சுவார்த்தைகளுக்கு கொழும்புக்கு வரமுடியவில்லை. அதனால் செல்வநாயகம் இரு பிரதான கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொறுப்பை முருகேசன் திருச்செல்வத்திடம் ஒப்படைத்தார். முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான அவர் அப்போது தமிழரசு கட்சியுடன் இணைந்திருந்தார். எம்.திருச்செல்வம் செல்வநாயகத்துக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டார்.
வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் தொடங்குவதற்கு முன்னதாகவே கொழும்பில் இரு தரப்புகளுடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.” லேக் ஹவுஸ்” ஆசிரியபீட பணிப்பாளரான எஸ்மண்ட் விக்கிரமசிங்க ( ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையார் ) ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் திருச்செல்வத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அந்த பேச்சுவார்த்தைகளில் விக்கிரமசிங்கவுக்கும் திருச்செல்வத்துக்கும் உதவியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் செயற்பட்டார்.
லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர்களான கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா மற்றும் அனில் முனசிங்க ஆகியோர் சுதந்திர கட்சியின் சார்பில் திருச்செல்வத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இடதூசாரிக் கட்சிகளான சமசமாஜ கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சுதந்திர கட்சியின் நேச அணிகளாக இருந்தன. அந்த பேச்சுவார்த்தைகளின்போது சமசமாஜி தலைலர்களுக்கு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஏ.அசீஸ் உதவி புரிந்தார்.
அந்த பேச்சுவார்த்தைகளை சமாந்தரமாக இரகசியமாக நடத்திய திருச்செல்வம் அங்கு பேசப்படுபவை குறித்து செல்வநாயகத்துக்கு மாத்திரம் அறிவித்துக் கொண்டிருந்தார். பேச்சுவார்த்தைகளை பறனறி தமிழரசு கட்சியின் மற்றைய தலைலர்கள் எவருக்கும் தெரியாது. ஆனால், திருச்செல்வம் தேர்தல் முடிவடையும் வரை எந்தவொரு தரப்புக்கும் உறுதிமொழி எதையும் வழங்கவில்லை. எது எவ்வாறிருந்தாலும், தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகத்தினால் மாத்திரமே தீர்மானம் எடுக்கப்பட்ட முடியும் என்பதுடன் கட்சியின் மூத்த தலைவர்களினாலேயே அது அங்கீகரிக்கப்படவும் முடியும்.
ரறட் றோட் சந்திப்பு
செல்வநாயகமும் தமிழரசு கட்சியின் ஏனைய தலைவர்களும் கொழும்பு வந்து சேர்ந்தார்கள்.தனிப்பட்ட முறையில் செல்வநாயகத்தை சந்தித்த எஸ்மண்ட் விக்கிரமசிங்க , தமிழரசு கட்சியுடன் காணப்படும் எந்த ஏற்பாட்டையும் ஐக்கிய தேசிய கட்சி மதித்துச் செயற்படும் என்று அவருக்கு உறுதியளித்தார். டட்லி சேனநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பு ஒன்று ரறட் றோட்டில் ( தற்போது அநகாரிக தர்மபால மாவத்தை ) இருந்த கராநிதி எம்.வி.பி. பிரிஸின் வாசஸ்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
டெடிகம தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான டட்லி சேனநாயக்க ஜே.ஆர். ஜெயவர்தன( கொழும்பு தெற்கு ), வி.ஏ. சுகததாச (கொழும்பு வடக்கு ) மற்றும் எஸ்மண்ட் விக்கிரமசிங்க சகிதம் அந்த சந்திப்புக்கு வந்தார். சந்திப்பில் கலாநிதி பீரிஸும் பங்கேற்றார்.
அவர் பிறகு ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரவை அமைச்சராக நியமாக்கப்பட்டார். தமிழரசு கட்சியின் தூதுக்குழுவில் செல்வநாயகம் ( காங்கேசன்துறை), வைத்தியக்கலாநிதி ஈ.எம்.வி. நாகநாதன்( நல்லூர் ), எஸ். எம் இராசமாணிக்கம் (பட்டிருப்பு ), வி. நவரத்தினம்( ஊர்காவற்துறை ) மற்றும் திருச்செல்வம் ஆகியோர் அடக்கியிருந்தனர்.
எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் திருச்செல்வமும் பெரும்பாலான முன்னேற்றபாட்டு பணிகளை செய்து முடித்திருந்ததால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்றன. நிருவாகத்திலும் நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு, வடக்கு, கிழக்கிற்கு அதிகாரப் பன்முகப்படுத்தல், வடக்கு, கிழக்கில் காணி பராதீனப்டுத்தல் மற்றும் குடியேற்றங்கள் போன்ற தங்களது அக்கறைக்குரிய விவகாரங்கள குறித்து தமிழரசு கட்சி கவனத்துக்கு கொண்டு வந்தது. மாவட்ட சபைகளை அமைப்பது உட்பட நான்கு விவகாரங்களில் மூன்றில் இரு தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வந்தன. காணி பராதீனப்படுத்தல் மற்றும் குடியேற்றங்களே பிரச்சினைக்குரிய விவகாரமாக இருந்தது.
அரச உதவியுடனான சிங்கள குடியேற்றங்கள் மூலமாக வடக்கு, கிழக்கின் பகுதிகளில் குடிப்பரம்பல் மாற்றியமைக்கப்படக்கூடாது என்று தமிழரசு கட்சி வலியுறுத்தியது. அதை பாரம்பரிய தமிழ்த் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் என்று வர்ணித்த தமிழரசு கட்சி, வடக்கு, கிழக்கில் குடியேற்றத் திட்டங்களில் தமிழ்பேசும் மக்கள் மாத்திரமே குடியமர்த்தப்பட வேண்டும் என்று கோரியது.
உணர்ச்சிவசப்பட்ட டட்லி சேனநாயக்க அதை மிகவும் கடுமையாக ஆட்சேபித்து ” அப்படியானால், எமது மக்கள் காணிக்கு எங்கே போவார்கள் ?” என்று திடுமெனக் கேட்டார். இரு தரப்பினரும் விட்டுக்கொடுப்பதற்கு மறுத்த நிலையில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. நள்ளிரவாகிவிட்ட நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்குமா தமிழரசு கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோ்வியடையப் போவது போன்று தோன்றியது.
கலாநிதி பீரிஸ் வெளியில் சென்று சில தொலைபேசி அழைப்புக்களை எடுத்த பிறகு நிலைவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென்று உள்ளே வந்த பீரிஸ் நள்ளிரவு அளவில் பிரதமராக பதவியேற்பதற்கு திருமதி பண்டாரநாயக்க இராணி மாளிகை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தமிழரசு கட்சி அவருக்கு ஆதரவு அளிக்கப்போகின்றது என்றும் செய்தி ஒன்று வந்திருக்கிறது என்று கூறினார்.
அந்த ” செய்தி ” தவறானது. ஆனால், திடுக்கிடச் செய்தி நிலைவரத்தில் திடீரென்று மாற்றம் ஏற்படுவதற்கு உதவியது. இரு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று காணப்பட வேண்டும் என்ற அவசர உணர்வும் உறுதிப்பாடும் அப்போது காணப்பட்டது. தமிழரசு கட்சி சுதந்திர கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பது குறித்து டட்லி சேனநாயக்கவுடன் ஆராயந்துகொண்டிருப்பதாகவும் செல்வநாயகத்தின் சார்பில் மகாதேசாதிபதி வில்லியம் கோபல்லாவவுக்கு செய்தியொன்று அனுப்பப்பட்டது.
அதற்கு பிறகு விடயங்கள் விரைவாக நகர்ந்தன. மேற்கொண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு எஸ்மண்ட் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு யோசனை ஒன்றை முன்வைத்தார். மாவட்டம் ஒன்றில் நீர்ப்பாசனத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போதும் விவசாய குடியேற்றவாசிகளுக்கு காணி வழங்கப்படும்போதும் அதே மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் ; அதற்கு பிறகு அருகாமையில் உள்ள மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று யோசனை கூறப்ட்டது. இந்த ஏற்பாடு இரு தரப்புகளுக்கும் ஏற்புடையதாக இருந்தது.
டட்லி – செல்வா உடன்படிக்கை
இணக்கப்பாடு எட்டப்ட்ட நிலையில், உடன்படிக்கைப் பிரதிகள் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திட வேண்டும் என்று ஜே.ஆர். ஜெயவர்தன யோசனையை முன்வைத்தார். ஜெயவர்தன உடனபடிக்கையின் நிமந்தனைகளை சத்தமாக வாசிக்க தமிழரசு கட்சியின் வி.நவரத்தினம் அதை தட்டச்சு செய்யத் தொடங்கினார். இரு பிரதிகளிலும் டட்லி சேனநாயக்கவும் செல்வநாயகமும் கைச்சாத்திட்டனர். அதுவே டட்லி – செல்வா உடன்படிக்கை என்று அறியப்பட்ட வரலாற்று முக்கியத்துவ உடனபடிக்கையாகும்.
கைச்சாத்திட்ட பிறகு இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். கைகுலுக்கும்போது செல்வநாயகம் மிகவும் எளிமையாக ” உங்களை நான் நம்புகிறேன்” என்று கூற அதற்கு டட்லி சேனநாயக்க ” முப்பது வருடங்களாக நான் அரசியலில் இருக்கிறேன். எனது வாக்குறுதிகளை நான் ஒருபோதும் மீறியதில்லை” என்று பதிலளித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று காணப்பட்டு விட்டது என்று உடனடியாகவே இராணி மாளிகைக்கு தொலைபேசி மூலமாக அறிவிக்கப்பட்டது. தமிழரசு கட்சி சார்பில் மகாதேசாதாபதிக்கு விலாசமிடப்பட்ட கடிதம் ஒன்று கலாநிதி பீரிஸ் வீடடில் வைத்தே தயாரிக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டது. அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழரசு கட்சி ஆதரவளிக்கின்றது என்று கூறும் அந்த கடிதம் கூறியர் மூலம் மகாதேசாதிபதிக்கு உடனடியாக அனுப்பப்பட்டது.
உடன்படிக்கை காணப்பட்ட பிறகு பெருமிதமடைந்த டட்லி சேனநாயக்க தமிழரசு கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகளை வழங்க விரும்புவதாக செல்வநாயகத்திடம் கூறினார். சமஷ்டி முறையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் இலட்சியம் நிறைவேறும் வரை அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை என்று தேர்தலில் போட்டியிடும் தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் சபதம் பூண்டிருப்பதால் தங்களால் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று செல்வநாயகம் டட்லி சேனநாயக்கவிடம் கூறினார்.
ஆனால், டட்லி தொடர்ந்தும் வலியுறுத்தினார். தமிழரசு கட்சி அரசாங்கத்தில் பங்கேற்காவிட்டால் தான் தலைமை தாங்கப் போகின்ற அரசாங்கம் ஒரு ” தேசிய” அரசாங்கமாக இருக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். தமிழரசு கட்சி அதன் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சி தலைவரின் வேண்டுகோளை தமிழரசு கட்சியின் பாராளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பதாக செல்வநாயகம் பதிலளித்தார். அதற்கு பிறகு தமிழரசு கட்சியின் தூதுக்குழு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பியது.
இறுதிநேர முயற்சி
தமிழரசு கட்சியினதும் வேறு கட்சிகளினதும் உதவியுடன் டட்லி சேனநாயக்க அரசாங்கம் ஒன்றை அமைக்கப்போகின்றார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், நிலைவரத்தை மாறாறியமைக்க சமசமாஜ கட்சி இறுதிநேர முயற்சி ஒன்றை மேற்கொண்டது. கலாநிதி என்.எம்.பெரேராவும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அசீஸும் றொஸ்மீட் பிளேஸில் இருந்த திருச்செல்வத்தின் வீட்டுக்கு சென்றனர்.
என்.எம். வாகனத்திற்குள் காத்திருந்த அதேவேளை, அசீஸ் உள்ளே சென்று திருச்செல்வத்தை சந்தித்தார். தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கப்போகின்றது என்று அசீஸிடம் திருச்செல்வம் கூறினார். ஏமாற்மடைந்த அசீஸ் திரும்பிச் சென்றார்.
அதற்கு பின்னரும் கூட சமசமாஜ கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. அவர் அனில் முனசிங்க சகிதம் அல்பிரட் ஹவுஸ் கார்டனில் இருந்த செல்வநாயகத்தின் வீட்டுக்கு சென்றார். சுதந்திரகட்சி தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழரசு கட்சி ஆதரவளித்தால் 1957 பண்டா — செல்வா உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று என்.எம். கூறினார். அதை பவ்வியமாக மறுத்த செல்வநாயகம் தனது கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு உறுதியளித்து விட்டது என்று கூறினார்.
கூட்டுக்கடிதம்
தனக்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் சகல கட்சி தலைவர்களிடம் இருந்தும் மகாதேசாதிபதிக்கு விலாசமிடப்பட்ட கடிதங்களை டட்லி சேனநாயக்க கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
” பொதுத்தேர்தல் முடிவுகள் 1964 டிசம்பர் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூட்டரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. ஜனப்பிரதிநிதிகள் சபையில் ஒரு பெரும்பான்மையை நாம் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறோம். ஜனநாயக சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்பதாகவும் நாம் இன்று முகங்கொடுக்கின்ற பொருளாதார மற்றும் ஏனைய நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்கவின் தலைமையின் கீழ் தேசிய அரசாங்கம் ஒன்றை நாம் ஆதரிப்போம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டது.
அதில் டட்லி சேனநாயக்க ( ஐக்கிய தேசிய கட்சி ), சி.பி.டி.சில்வா ( ஸ்ரீலங்கா சுதந்திர சோசலிஸ்ட் கட்சி ), எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தமிழரசு கட்சி ), ஜீ.ஜீ. பொன்னம்பலம் ( அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ), பிலிப் குணவர்தன ( மக்கள் ஐக்கிய முன்னணி) ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
டட்லி.சேனநாயக்கவும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் கைச்சாத்திட்ட அந்த கடிதம் மகாதேசாதிபதி வில்லியம் கோபல்லாவவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்ட்டது. அதனால் திருப்தியடைந்த கோபல்லாவ சிறிமா பண்டாரநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பானமைப் பலம் ஐக்கிய தேசிய கட்சியிடம் இருக்கிறது என்று கூறினார்.
இராணி மாளிகைக்கு வந்து தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதாக திருமதி பண்டாரநாயக்க மகாதேசாதிபதிக்கு அப்போது அறிவித்தார். இராணி மாளிகைக்கு வந்து பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளுமாறு டட்லி சேனநாயகாவிடம் கேட்கப்பட்டது. அதன் பிரகாரம் அவர் நான்காவது தடவையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழரசு கட்சியின் பாராளுமன்றக் குழு
அதேவேளை, தமிழரசு கட்சியின் பாராளுமன்றக் குழு கொழும்பில் கூடியது. ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து செலாவநாயகம் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளித்தார். கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகளை தருவதற்கு டட்லி.சேனநாயக்க முன்வந்தது பற்றி உறுப்பினர்களுக்கு தெரிவித்த அவர் அமைச்சரவையில் ஒருவர் இருந்தால் டட்லி – செல்வா உடன்படிக்கை சுமுகமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு பயனுடையதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார். அதை ஆதரித்த வைத்தியக்கலாநிதி ஈ.எம்.வி. நாகநாதன் வெளியில் இருப்பதை விடவும் அரசாங்க அணிக்குள் இருந்துகொண்டு பணியாற்றவது சுலபம் என்று கூறினார்.
அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் எடுத்துக்கொண்ட சபதத்துக்கு தெரிவுசெய்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் கட்டுப்பட வேண்டியவர்களாக இருந்ததால், அத்தகைய சபதத்தை எடுக்காத ஒருவர் அமைச்சர் பதவியை ஏற்கலாம் என்று தீர்மானிக்கப்ட்டது.
மூன்று அமைச்சர் பதவிகளை அல்ல ஒரு அமைச்சர் பதவியை மாத்திரமே தமிழரசு கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. தேசிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சியை திருச்செல்வம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர் அமைச்சர் பதவியை ஏற்பதற்கு வசதியாக அவர் செனட் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து திருச்செல்வம் தேசிய அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார்.
” ஹத் ஹவுலா “
பிரதமர் டட்லி சேனநாயக்கவின் 1965 தேசிய அரசாங்கம் ஏழு கட்சிகளைக் கொண்ட ( ஐக்கிய தேசிய கட்சி, தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர சோசலிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜாதிக விமுக்தி பெரமுன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) ஒரு கூட்டரசாங்கமாக இருந்தது. அது ” ஹத் ஹவுலா ” என்று பிரபல்யமாக அழைக்கப்பட்டது. ஏழு கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டு என்பது அதன் அர்த்தம்.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர சோசலிஸ்ட் கட்சி, தமிழரசு கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஜாதிக விமுக்தி பெரமுனவின் குசுமா ராஜரத்ன ஒரு பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழ் காங்கிரஸ் அமைச்சர் பதவி எதையும் ஏற்கவில்லை. ஆனால், அந்த கட்சியின் உடுப்பிட்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் 1968 ஆம் ஆண்டில் பிரதி சபாநாயகராகவும் பாராளுமன்ற குழுக்களின் தவிசாளராகவும் வந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்காக தீவிரமாகப் பிரசாரம் செய்தது. ஆனால்,சொந்தத்தில் வேட்பாளர் எவரையும் போட்டிக்கு நிறுத்தவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் எஸ். தொண்டமானும் வீ. அண்ணாமலையும் பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
அந்த கட்சியைச் சேர்ந்த ஆர். யேசுதாசன் செனட்டராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழாவது அங்கத்துவக் கட்சி.டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கம் 17 அமைச்சர்களுடன் 1965 மார்ச் 27 ஆம் திகதி பதலியேற்றுக் கொண்டது.
இந்த ” ஹத் ஹவுலா ” தேசிய அரசாங்கமே சுதந்திரத்துக்கு பிறகு முழுமையான ஐந்து வருட பதவிக் காலத்தையும் ( 1965 –1970 ) நிறைவுசெய்த முதலாவது அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் கோணேஸ்வர் ஆலயத்தின் வளாகத்தை புனிதப்பிரதேசமாக பிரகடனம் செய்ய டட்லி சேனநாயக்க மறுத்ததை அடுத்து 1968 ஆம் ஆண்டில் திருச்செல்வம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
தமிழரசு கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஆனால், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. டட்லி சேனநாயக்க அரசாங்கம் அதன் வாக்குறுதியின் பிரகாரம் மாவட்ட சபைகள் திடடத்தை அறிமுகப்படுத்தவும் தவறியது. தமிழரசு கட்சி 1969 ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது.
1970 தேர்தலில் ஐ.தே க. படுதோல்வி
டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கம் அதன் ஐந்து வருட பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்தது. அதனால் நம்பிக்கையுடன் 1970 மே பாராளுமன்ற தேர்தலில் நாட்டு மக்களிடமிருந்து புதிய ஆணை ஒன்றைப் பெறுவதற்கு விரும்பியது. ஆனால், இலங்கை வாக்காளர்களுக்கு வேறு சிந்தனை இருந்தது. தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மிகவும் கடுமையான தீர்ப்பை அவர்கள் வழங்கினார்கள். அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவியது.
டி.பி.எஸ். ஜெயராஜ் Virakesari