“சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக பலரும் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வரும் போக்கு அதிகரித்துள்ளது.

அவ்வகையில் கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஏப்ரல் 15 ஆம் தேதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் தனது குடும்பத்தினரும் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்குச் சென்றிருந்தார்.

மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

அந்த ரீல்ஸ் வீடியோவில், “அப்பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, ‘அம்மா! அம்மா!” என்று கூப்பிடுவது\” பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து அப்பெண்ணின் உடலை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். ஆனால் அப்பெண்ணின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.?

Share.
Leave A Reply