யாழில் (Jaffna) வீடொன்றுக்குள் இருந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பருத்தித்துறை – தும்பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தும்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மேற்படி பெண் வீட்டில் இருந்த வேளையில் வீட்டை கொள்ளையிடும் நோக்கில் வந்த நபரொருவர் பெண்ணை பொல்லால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்….! | Old Women Death Body Found In Jaffna

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply