“ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த பகுதி தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது.
இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வெளியிடப்பட்ட தகவலின்படி, நெட்வொர்க்கில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 Mbps ஐ எட்டியது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 ஜி இணைய சேவை மூலம் 2 மணி நேர படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த சேவையானது அதி நவீன 50 ஜி பேசிஸ் ஆப்டிகலி நெட்வொர்க் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் சீனாவின் மற்ற மாகாணங்களிலும் இந்த 10ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5G சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. “,