இஸ்ரேலுக்கு அதன் அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவில் அகண்ட இஸ்ரேலை உருவாக்க உதவுவதற்காக நடந்து வரும் இனப்படுகொலைக்கு ஆதரவளித்து, அரபு சர்வாதிகாரிகள் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இப்பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து சர்வாதிகாரிகளும் விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும், சவூதி அரேபியா, ஜோர்தான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளின் இஸ்ரேலுக்கான வெட்கக்கேடான ஆதரவு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சவூதி அரேபியா இஸ்லாத்தின் நிலம். இந்த படுகொலைகளை கண்டும் காணாமல் சவூதி ஆட்சியாளர்கள் எவ்வாறு கண்மூடித்தனமாக இருக்க முடியும் என்று பல கட்டுரையாளர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். பலதடவைகள் வெறும் கண்டனங்ளை வெளிவியிடுதை தவிர சவூதி ஆட்சியாளர்கள் இனப்படுகொலையை நிறுத்த எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
பலஸ்தீனர்களை படுகொலை செய்வதை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அமைதியான ஆபிரிக்க முஸ்லிம் நாடான சூடானை மில்லியன் கணக்கான மக்களை அகதி முகாம்களுக்குள் தள்ளிவிடும் கொலை களமாக மாற்றிய ஐக்கிய அரபு அமீரகத்திடமும் அவர்கள் இதே கேள்வியை எழுப்பி உள்ளனர்.
அரபு ஆட்சிகள் குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடுகள் இப்போது இஸ்ரேலின் 12.5 பில்லியன் டொலர் பாதுகாப்பு ஏற்றுமதியில் கால் பங்கைக் கொண்டுள்ளன. இரு தரப்பு சரக்குகளின் ஓட்டம் பல மடங்கு அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 11.2 மில்லியன் டொலரிலிருந்து 2 பில்லியன் டொலராக விரிவடைந்துள்ளது. மென்பொருளைத் தவிர்த்து, ஜனவரி முதல் ஆகஸ்ட் 2023 வரை இந்த நிலை காணப்படுவதாக அமீரகத்தின் தூதர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் கூட்டாண்மை ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் டொலராக அதிகரிக்கும் நோக்கத்துடன் சலுகைகளை அதிகரித்தது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கியுடனான இஸ்ரேலின் வர்த்தகத்தை விட மிகக் குறைவாக இருந்தாலும் இது எகிப்து மற்றும் ஜோர்தானுடனான இஸ்ரேலின் வர்த்தகத்தை விட மிக அதிகமாகும்.
இஸ்ரேலிய தலைமை நிர்வாக அதிகாரிகள் பைனான்சியல் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது போல் காஸா இனப்படுகொலைக்கு மத்தியில் இது “வழமையான வணிகம் போல் ” உள்ளது. புதிய முதலீட்டுத் திட்டங்கள் முன்னேறி வருகின்றன. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனம் டெல் அவிவுக்கு தனது விமானங்களைத் தொடர்கிறது, மற்றவர்கள் தங்கள் விமானங்களை இரத்து செய்தாலும் கூட.
மக்கள் தங்களை அவமதிக்கும் அரபு ஆட்சிகள், பிசாசுடன் ஒரு உடன்பாட்டைச் செய்துள்ளன என வர்ணித்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவு-மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உட்குறிப்பு மூலம்-ஒரு புதிய “அரபு வசந்தம்” அல்லது வெகுஜன இயக்கம் ஏற்பட்டால் தங்கள் “பாதுகாப்பை” அதிகரிப்பதற்கான வொஷிங்டனின் உறுதிப்பாட்டை மீறி தமது ஆட்சியாளர்ளை பதவி நீக்கம் செய்ய தயாராகி வருகின்றனர். எதிர்பார்க்கப்படும் சீனாவின் மீதான போருக்கும் ஈரானுக்கு எதிரான போரிலும் தமதுதேசத்தை காக்க படை அணி ஒன்று குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அரபு-முஸ்லிம் தலைவர்கள் புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் இருந்தால் என்ன என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், கட்டுரையாளர் டாக்டர் மஹ்பூப் ஏ கவாஜா, அமெரிக்கா இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அரபு சர்வாதிகாரிகள் குறிப்பாக அண்டை நாடான சவூதி அரேபியா, ஜோர்டான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட வாட்டி வதைக்கப்பட் பலஸ்தீனர்கள் மீதான அரபு-முஸ்லீம் தலைவர்களின் துரோகத்தை வெட்ட வெளிச்சமாக அம்பலப்படுத்தி உள்ளார்.
சமீபத்திய அரபு உச்சிமாநாட்டிற்குப் பிறகு அவர் எழுதி உள்ள ஆக்கத்தில் காஸா மற்றும் பலஸ்தீனத்தின் பிற பகுதிகள் முழுவதும் தரையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க அவர்கள் காது கேளாதவர்களா அல்லது மனசாட்சி மரணித்திவிட்டதா என்று கேட்டுள்ளார். வெகுஜனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான மோசடி, தீமை மற்றும் துரோகத்தின் உருவப்படம் உலகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சர்வாதிகாரத் தலைவரினதும் ஒவ்வொரு இளவரசரினதும் ஒவ்வொரு மன்னரினதும் இதயங்களில் ஒரு சர்வாதிகாரியும், மனித இனத்தின் எதிரியும் உள்ளனர் என்றே வரலாறு வெளிப்படுத்துகின்றது.
பெரும்பாலான நவீன அரபு நாடுகள் இரகசிய காவல்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு பயத்துடனும் அவர்கள் மீதான வெறுப்புடனும் வாழுகின்றனர். மக்கள் சுதந்திரமாக சிந்திக்கவும், நியாயமற்ற காரணத்தை விளக்கவும் முடியாத இடங்களில், இதன் விளைவாக மனித முன்னேற்றம் தடைபட்டு அராஜகமும் பைத்தியக்காரத்தனமும் தேசத்தின் ஆட்சியாக மாறுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலின் காஸா இனப்படுகொலைக்கு எவ்வாறு உதவினார்கள் என்பதைக் கையாளும் அரசியல் ஆய்வாளர் மகெட் மாண்டூர், அரபு ஜனநாயக இயக்கத்தைத் தோற்கடித்ததால் எதேச்சதிகார அரசுகள் வெற்றிடமாகிவிட்டன. மேலும் இந்த தேசங்கள் உயிர்வாழ பெரும்பாலும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவை நம்பியுள்ளன என்றார். பலஸ்தீனர்கள் எந்த நேரத்திலும் உதவியை எதிர்பார்க்க முடியாது.
காஸாவில் இஸ்ரேல் தனது இனப்படுகொலை போரைத் தொடரும்போது, பெரும்பாலான அரபு நாடுகள் காஸா மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மற்றும் லெபனான் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை வெறும் பார்வையாளர்களாகவே அவதானித்து வந்துள்ளன அல்லது அதற்கு பங்களிப்பு செய்து வந்துள்ளன.
முழு பிராந்தியத்திலும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கக் கூடிய ஒரு பெரிய அளவிலான பிராந்திய போரின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இஸ்ரேலிய ஏகாதிபத்திய ஹப்ரிஸை (இஸ்ரேலின் மிகைப்படுத்தப்பட்ட பெருமையும் தன்னம்பிக்கையும் ) கட்டுப்படுத்தும் திறனும் விருப்பமும் அரபு நாடுகளிடம் இருக்கவில்லை என்றே தெரிகிறது.
காஸா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலிய போர்களுக்கு திறம்பட நிதியளித்த அமெரிக்காவைத் தவிர வேறு யாரும், மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய உதவியாளராக இல்லை என்று கூற முடியாது. காரணம், இந்த நிதி உதவிகள் 2023 அக்டோபர் 7 முதல் 30 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன.
எகிப்து அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து 183.5 பில்லியன் டொலர் உதவியைப் பெற்று, அதை இஸ்ரேலின் நட்புடன் ஒரு சாத்தியமான பேச்சாளராக நிலைநிறுத்தியது. எவ்வாறாயினும், இந்த மூலோபாய நிலைப்பாட்டை சிசி அரசாங்கம் தன்னை நிலையாக வைத்திருப்பதற்கான ஆர்வத்தால் முறியடித்தது. இது இஸ்ரேலுடன் ஒரு சார்பு உறவில் நிலைநிறுத்தியது. அதே நேரத்தில் சிசி விரும்பும் ஸ்திரத்தன்மையை இஸ்ரேல் அச்சுறுத்தியும் வருகிறது.
உண்மையில், 2013 ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு சிசி அரசாங்கத்தை ஒருங்கிணைப்பதில் இஸ்ரேல் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கவில்லை. எகிப்திய உயரடுக்கின் நேரடி நன்மைக்காக அரசியல் ஆதரவு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பொருளாதார உறவுகளை வழங்கியது.
சிசி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இடையிலான உறவு, 1979 அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு இரு நாடுகளையும் சேர்ந்த எந்தவொரு தலைவருக்கும் இடையில் காணப்படாத நெருங்கிய உறவு என்று விவரிக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான வெட்கக்கேடான குற்றங்கள் பிராந்தியத்தில் வழக்கமாகிவிட்டன. உலக வல்லரசுகள் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை. சிறந்த முறையில் அவர்கள் பலவீனமான கவலைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டனர். இப்போது அமெரிக்கா அதைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை. இது முற்றிலும் இனப்படுகொலையுடன் இணைந்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் காஸாவில் வன்முறையான இனச் சுத்திகரிப்புக்குத் திட்டமிட்டுள்ளன. யாரும் அவர்களைத் தடுக்க மாட்டார்கள் என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன.
2025 ஆம் ஆண்டின் புதிய உலக ஒழுங்கு என்பது சட்டவிரோதமானது.பெரிய வல்லரசுகளும் அவற்றின் கூட்டாளிகளும் உலக வரைபடத்தை வன்முறையில் மறுசீரமைக்கு உறுதிபூண்டுள்ளனர்.
இதன்படி, பலஸ்தீனம் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். யேமன் முதல் லெபனான் மற்றும் கிறீன்லாந்து வரை சிறிய நாடுகள் தண்டனையில்லாமல் தாக்கப்படலாம். இருப்பினும் சர்வதேச சட்டத்தில் கவனம் செலுத்த இஸ்ரேலுக்கு ஒருபோதும் நேரம் கிடைக்கவில்லை. இது படைபலம் சரியானது என்ற கோட்பாட்டின் முன்னோடியாக உள்ளது. அந்த கோட்பாடு தான் இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது.
சர்வதேச சட்டமும் சர்வதேச உதவியும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
காஸா தொடர்பான மேற்குலகின் நயவஞ்சகத் தனம் இனி மேலும் புறக்கணிக்க முடியாதது என்று ஜொனாதன் குக் என்ற பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
லத்தீப் ஃபரூக் Virakesari