“காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள ‘மாமன்’ படம் நாளை வெளியாகிறது.

அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர்,

பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த சிறுமி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த நடிகர் சூரியின் நண்பர் ஒருவர் சூரிக்கு வீடியோ கால் செய்து நடந்ததை கூறியுள்ளார்.

உடனே அந்த சிறுமிக்கு வீடியோ கால் மூலமாகவே சூரி ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை எக்ஸ்தளத்தில் வெளியிட்ட சூரி, அந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும் என பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ “மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…

இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு,இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும் என சூரி கூறினார்.

இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ!”மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…

இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின்… pic.twitter.com/4kvoghXsma— Actor Soori (@sooriofficial) May 16, 2025 “,

Share.
Leave A Reply