பதுளை, துன்ஹிந்த பகுதியில் சுற்றுலா பஸ் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர். அத்துடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம், தம்புதுதேகம பிரதேசத்தில் இருந்து பதுளைப் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் நேற்று மாலை பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை வீதி, 4ஆம் கட்டைப் பகுதியில் வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பஸ்ஸில் பயணித்த 35 பேர் காயங்களுக்குள்ளாகி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.