ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை அமெரிக்கா தாக்கியதையடுத்து, ஈரான் உச்சத் தலைவர் காமேனி எக்ஸில் கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “அமெரிக்கா தலையிட்டது, ஆனால் வெற்றி ஈரானுக்கு!” என பதிவிட்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) நள்ளிரவில், ஈரானின் அணு ஆயுதத் திட்டப் பகுதிகளைத் தாக்கியது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாக பார்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் உச்சத் தலைவர் காமேனி இன்று எக்ஸ் தளத்தில் அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். அவை…

“அமெரிக்காவை வீழ்த்திய ஈரானின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஜியோனிச ஆட்சி முற்றிலும் அழிக்கப்பட்டுவிடுமோ என்று அமெரிக்கா போரில் நேரடியாக நுழைந்தது. ஆக, அதை காக்க தான் அமெரிக்கா நுழைந்தது. ஆனால், ஒன்றையும் சாதிக்கவில்லை”.

அதிபர் ட்ரம்ப்

“இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் முகத்தில் பலமான அறையைக் கொடுத்தது. அமெரிக்காவின் முக்கிய முகாமான அல்-உதெய்த் விமானத் தளத்தை ஈரான் தாக்கி மற்றும் சேதத்தை ஏற்படுத்தியது”.

“இந்தப் பகுதியில் இருக்கும் அமெரிக்காவின் முக்கிய மையங்கள் அனைத்தையும் இஸ்லாமிய குடியரசால் நெருங்க முடியும். தேவை ஏற்பட்டால், அதன் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் மேற்கொள்ளப்படலாம். இனி ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், எதிரி நிச்சயம் பெரிய விலையை கொடுக்க வேண்டியதாக இருக்கும்”.

“ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கூறினார். இது அமெரிக்க அதிபர் வாயிலிருந்து வெளி வராத அளவிற்கு பெரிய வார்த்தை ஆகும்”.

இந்தப் பதிவுகள் மூலம் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிகையை விடுத்துள்ளார் காமேனி.

&

n

bsp;

 

Share.
Leave A Reply