கணவர் மரணம்: இரண்டு மைத்துனருடன் தொடர்பு- பெண் கொலை, நகை திருட்டு வழக்கில் அம்பலமான மருமகளின் குட்டு..!

“உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் 54 வயது பெண் கொலை செய்யப்பட்டு, தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மருமகளின் குட்டு அம்பலமாகியுள்ளது.

ஜான்சியில் உள்ள கும்ஹாரியா கிராமத்தில் சுஷிலா தேவி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கணவரை இழந்தவர்.

இவர் கடந்த ஜூன் 24ஆம் தேதி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அத்துடன் வீட்டில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதனால் போலீசார் கொள்ளையை தடுக்க முயன்றபோது, சுஷிலா தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில்தான் அனில் வர்மா என்பவர் நகையை விற்பனை செய்ய முயற்சித்தபோது போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது போலீசார் மீது அனில் வர்மா துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசாருக்கு பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்தனர்.

இதற்கிடையே சுஷிலா தேவியின் மருமகள் பூஜா அதே வீட்டில் வசித்து வந்தார்.

அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல் வெளியானது.

சுஷிலா தேவியின் மூத்த மகனின் மனைவிதான் பூஜா. கணவன் இறந்த பிறகு, கணவரின் தம்பி கல்யாண் சிங் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கல்யாண் சிங்கும் மரணமடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, உறவின்முறை மாமனார் மற்றும் மற்றொரு மைத்துனர் சந்தோஷ் ஆகியோர் பூஜாவை பூர்வீக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு வந்த பூஜா, மைத்துனரான சந்தோஷ் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். சந்தோஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

சந்தோஷ் உடனான தொடர்பால் பூஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு சந்தோஷின் சட்டப்பூர்வ மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

9 மாதங்களாக அவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.சுஷிலா தேவியின் மூன்று மகன்களுக்கும் மனைவியானதால், வீட்டுத் தலைவி அந்தஸ்தை பிடித்துள்ளார்.

அத்துடன் கணவர் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

கணவர் குடும்பத்தினருக்கு சுமார் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. அவருக்கு இதில் பாதி நிலம் என்பதை வலியுறுத்தி அதை விற்பனை செய்து விட்டு குவாலியருக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

சந்தோஷ் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சுஷிலா தேவி ஒப்புக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாமியார் சுஷிலா தேவியை கொலை செய்ய பூஜா முடிவு செய்துள்ளார். அதன்படி திட்டம் தீட்டியுள்ளார்.

தனது சகோதரி மற்றும் சகோதரியின் காதலன் (அனில் வர்மா) ஆகியோர் உதவியுடன் சுஷிலா தேவியை கொலை செய்து, நகை கொள்ளை அடிக்கப்பட்டதாக நாடகமாடியுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் குற்றத்தை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார். பூஜாவும், அவரது சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட அனில் வர்மா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூஜா கொலையில் ஈடுபட்டடு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கணவன் மற்றும் கணவரின் தம்பி மரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.”,

Share.
Leave A Reply