சென்னை: நடிகர் கமலஹாசனின் நடிப்பை ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
தனது 6 வயதில் திரைப்பயணத்தை ஆரம்பித்த கமல்ஹாசன் தற்போது வரை நாயகனாக மிரட்டி வருகிறார்.
பல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தாலும், திரையில் கமல், ஸ்ரீதேவி இவர்களின் கெமிஸ்டிரி அழகாக மற்றும் பொருத்தமானதாக இருக்கும்.
ஸ்ரீதேவி பற்றி கமல் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது, இவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகள் இவரின் அழகையும், திறமையையும் பார்த்து காதலில் விழுந்துவிடுவார்கள்.
அப்படி காதலில் விழுந்த நடிகை தான் வாணி கணபதி. அவரை கமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இந்த திருமண வாழ்க்கை நீடிக்காமல் போக வாணி கணபதியை விவாகரத்து செய்தார். பின், நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ருதிஹாசன் ,அக்ஷரா ஹாசன் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
நடிகர் கமல்: அதன் பிறகு நடிகை கௌதமியுடன் சேர்ந்து நடித்த போது, காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், சரிகாவை விவாகரத்து செய்துவிட்டு. நடிகை கௌதமியை திருமணம் செய்யாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர்.
பின் அவரையும் பிரிந்தார். இப்படி, கமல் யாருடன் சேர்ந்து நடிக்கிறாரா அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகையும் கிசுகிசுவில் சிக்கி விடுவார்கள். அப்படி ஒரு ராசி நம்ம ஆண்டவருக்கு.
அண்மையில், கமல் நடித்த தக் லைப் திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த படத்தில் அபிராமிக்கும், த்ரிஷாவிற்கும் கொடுத்து முத்தம் சர்ச்சையானது.
இந்த வயதிலும் ஆண்டவர் ஆதே மூட்லத்தான் இருக்கிறார் என பலரும் கிண்டலடித்தனர்.
நம்ப மாட்டாங்க: இந்த நிலையில், கமல்ஹாசன் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இதில்,மறைந்த நடிகை ஸ்ரீதேவி உடனான உறவு குறித்து பேசியிருக்கிறார். அதாவது, என்னையும் ஸ்ரீதேவியும் சேர்த்து வைத்து பல கிசுகிசு செய்திகள் வந்தன.
ஆனால், அதெல்லாம் உண்மையே இல்லை. எனக்கும் ஸ்ரீ தேவியும் பிரதர், சிஸ்டர் போன்ற உறவு தான். என்னுடைய மேனரிசமும், ஸ்ரீ தேவியின் மேனரிசமும் ஒன்றாக இருக்கும்.
ஸ்ரீதேவியுடனும் நான் ஸ்ரீ வித்யா உடன் பழகிய மாதிரியே தான் பழகினேன் என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மையே கிடையாது.
நான் அவங்க பக்கத்துல போயிட்டு மொறச்சாலே பயந்துடுவாங்க. ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் என்னை சார் என்று தான் கூப்பிடுவாங்க. நாங்கள் இப்படித்தான் பழகினோம்.
எங்களுக்கு இடையேயான உறவு இப்படித்தான் இருந்தது. ஆனால், வெளியில் நாங்கள் இருவரும் கணவன் மனைவி பல செய்திகள் வந்த. அது அப்படி இல்லை என்று நாங்க சொன்னாலும் யாரும் அதை நம்பல என்று கமல்ஹாசன் அந்த பேட்டில் கூறியிருந்தார்.
காதல் இருந்தது: ஆனால், நடிகை குட்டிபத்மினி ஸ்ரீதேவி பற்றி ஒரு வீடியோவில் பேசி இருந்தார்.
அதாவது, கமலின் அழகுக்கு ஈடுகொடுக்கும் நடிகையாக ஸ்ரீதேவி இருந்தார். கமலுடன் சேர்ந்து நடித்த ஸ்ரீதேவிக்கு அவர் மீது தனி அன்பு உண்டு.
ஆனால், அந்த நேரத்தில், பாலிவுட் நடிகை ரேகா பற்றியும் கமல் பற்றியும் நிறைய கிசுகிசு வரும்.
அதையெல்லாம் பார்த்து, பல முறை ஸ்ரீதேவி என்னிடம் வருத்தப்பட்டு பேசுவார். அந்த காலத்தில் கமலுடன் யார் சேர்ந்து நடித்தாலும் நிச்சயம் அவர் மீது காதல் வந்துவிடும்,
ஏன் என்றால் அந்த அளவுக்கு அழகாகவும், திறமையான நடிகராகவும் கமல் இருந்தார். அது போலத்தான் ஸ்ரீதேவிக்கும் அவர் மீது காதல் வந்தது. கடைசியில் கமல்ஹாசன், வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார் என்று கூறி இருந்தார்.