2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 03 ஆம் திகதி வரை 76 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
மாத்தறை கபுகொட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும், அம்பலாந்தோட்டை ஹங்காம, பிங்கம பகுதியில் சனிக்கிழமை (02) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் ஒருவர் காயமடைந்தார்.