கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை பெருமளவு துப்பாக்கி ரவைகள் கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் சிதறி காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பரப்ரப்பு; பாடசாலைக்கு அருகில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் | Kilinochchi Bullets Found Near School

அதனை அவதானித்த பாடசாலை சமூகம் அது தொடர்பில் உடனடியாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிசார், மற்றும் இராணுவத்தினர் ரவைகளை மீட்டுச் சென்றுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply