ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜெரூசலேம் மற்றும் மாலே அடுமின் பகுதிகளிற்கு இடையிலான குடியேற்ற திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் வீடுகளை அமைப்பது மேற்கு கரையை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலேத்திலிருந்து முற்றாக துண்டிக்கும்.

இஸ்ரேலிய குடியேற்ற எதிர்ப்புக் குழுவான பீஸ் நவ் படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் சுமார் 160 குடியிருப்புகளில் சுமார் 700,000 குடியேறிகள் வசிக்கின்றனர். இது பாலஸ்தீனியர்கள் எதிர்கால சுதந்திர அரசைத் தேடும் நிலம்.

குடியேற்ற அமைப்பின் யேஷா கவுன்சில் தலைவர் இஸ்ரேல் கன்ஸ் மற்றும் மாலே அடுமிம் மேயர் கை யிஃப்ராக் ஆகியோருடன் ஒரு செய்தி மாநாட்டில் திட்டத்தை அறிவித்த ஸ்மோட்ரிச், இந்த நிலம் கடவுளால் யூதர்களுக்கு வழங்கப்பட்டது என்றார்.

இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க வெளியுறவுத்துறை, “ஒரு நிலையான மேற்குக் கரை இஸ்ரேலைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் பிராந்தியத்தில் அமைதியை அடைவதற்கான இந்த நிர்வாகத்தின் குறிக்கோளுக்கு ஏற்ப உள்ளது” என்று கூறியது.

 

இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி கூறினார். “எதிர்கால பாலஸ்தீன அரசை இரண்டாகப் பிரித்து சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் E1 தீர்வுத் திட்டங்களை இங்கிலாந்து கடுமையாக எதிர்க்கிறது,” என்று அவர் கூறினார்.

இது பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக இல்லாமல் செய்யும் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் அங்கீகரிப்பதற்கும் எதுவும் எவருமில்லை என தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்களின் கீழ் குடியேற்றம் என்பது சட்டவிரோதமானதாக காணப்படுகின்றது. மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான விவகாரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இது காணப்படுகின்றது.

மேற்குகரையிலும் கிழக்குஜெரூசலேத்திலும் உள்ள 160 குடியேற்றங்களில் ஏழு இலட்ச்சம் யூதர்கள் வசிக்கின்றனர்.

இது பாலஸ்தீனியர்கள் எதிர்கால சுதந்திர தேசத்திற்கான கோருகின்ற நிலம்.

பலவருடகால சர்வதேச அழுத்தம் மற்றும் முடக்கங்களிற்கு பின்னர் நாங்கள் மரபுகளை மீறி மாலே அடுமிமை ஜெரூசலேத்துடன் இணைக்கின்றோம் என இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது சியோனிசத்தின் சிறந்த வடிவம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply