கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன  உறுதிப்படுத்தினார்.

வைத்தியர்களின் ஆலோனைக்கமைய, ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க கைதால் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதால் தற்போது அனைத்து, எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தற்போது இருக்கும் சிறைச்சாலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றார். இதனிடையே சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் கைதுடன் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ரணிலுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன, சந்திரிகா பண்டரா நாயக்க குமாரதுங்க ஆகியோர் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நாளைய தினம் அவர்கள் ஒன்றிணைந்து ஊடக சந்திப்பொன்றை நடத்த பேச்சு வார்த்தை ஆரம்பித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Share.
Leave A Reply