1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த 69 முஸ்லிம் யாத்ரீகர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் சார்பில் ஏ.எம்.எம். ரவூப் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இதன்போது, சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தி, பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை (26) காலை 9:30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
குருக்கள்மடம் படுகொலை
யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர்.
இலங்கை முஸ்லீம் இனத்தவர்களுக்கு 1990ம் ஆண்டு குருதி தோய்ந்த ஆண்டு என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அதன் உச்சத்தைத் தொட்ட காலம் அது.
இத்தொடர் படுகொலைகளின் முதல் களம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கீழ்வரும் கூட்டுப் படுகொலைகள் தொடர்ந்தது.வதற்கு வசதியாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் கூட்டுப்படுகொலைகள்:
1990 யூலை – 12 மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 முஸ்லீம் பயணிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 01 மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990 ஆகஸ்ட் – 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 05 அம்பாறை முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 06 அம்பாற 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
1990 ஒக்ரோபர் – 30 வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம்
1992 ஒக்ரோபர் – 15 பலியகொடல்லா 285 கிராம வாசிகள் படுகொலை