1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்.
2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம்.
3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக்குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.
4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
5) லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.
6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.
7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.
இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.
9) உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.
10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.
11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்.
12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்.
13) இளைஞர் சேவைகள் கழத்தை ஆரம்பித்தவர்.
14) அற-நெறிக் கல்விக்கு வித்திட்டவர்.
15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் (COLLEGE OF EDUCATION)
16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்.
17) போட்டிப்பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்குவதை ஆரம்பித்தவர்.
18) ஒரே தடவையில் அரச ஊதியம் 10000/-ரூபாவால் அதிகரித்தவர்.
19) இலங்கைக்கு முதன்முதலில் கையடக்கத் தொலைபேசி சேவையை (CELL TEL LANKA) கொண்டு வந்தவர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டது குறித்து, இலங்கையின் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையின் பத்திரிகையாளர் எஸ். வெங்கட் நாராயண் கூறுகையில்,
“அவரது கைது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் செய்ததில் எந்த ஊழல்களும் இல்லை.
அவர் G77 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கியூபா சென்றார்.
பின்னர் ஹவானாவிலிருந்து, ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றார்.
கொழும்புக்குத் திரும்பும் வழியில், அவர் லண்டனில் தங்கினார்.
ஆங்கிலப் பேராசிரியரான அவரது மனைவி, வழக்கமாக ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிற்காக ஜெய்ப்பூர் வருவார்.
உள்ளூர் பல்கலைக்கழகம் இருவரையும் ஒரு விழாவிற்கு அழைத்தது.
லண்டனில் இருந்து, அவர் அங்கு வந்து 200 கி.மீ. காரில் வால்வர்ஹாம்டனுக்குச் சென்றார்…
மைத்ரேவின் (விக்ரமசிங்கேவின் மனைவி) பயணத்திற்கான செலவுகளை அவரே( மனைவியே) கவனித்துக் கொண்டார்.
அவர்களுடன் வால்வர்ஹாம்டனுக்குச் சென்ற மற்ற 10 பேரும் அரசு ஊழியர்கள் என்றும்,
அவர்கள் அவர்களை ஒரு தனிப்பட்ட பயணத்திற்குப் பயன்படுத்தினர் என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
பின்னர் அவர்கள் அவரைக் கைது செய்தனர்.
இது ஒரு ஊழல் அல்ல.
ஜனாதிபதி ஒரு தனிப்பட்ட நபராக இருந்தாலும் கூட, அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி இலங்கையில் பாதுகாப்பு ஊழியர்களை வைத்துக்கொண்டு வால்வர்ஹாம்டனுக்கு தனியாக செல்ல முடியாது”
ரணில் விக்கிரமசிங்க எந்த ஊழல்களும் செய்யவில்லை!: பிரபல பத்திரிகையாளர் நாராயண மூர்த்தி பேட்டி