ஒரு நபர், தனது முதல் மனைவியிடம் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் கொண்டு வருகையில் வசமாக சிக்கியிருக்கிறார்.

இந்த சம்பவம், கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

சிங்கப்பூரில் வாழும் இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் என்ன நடந்தது? அவர் இரண்டாவது மனைவியுடன் முதல் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியது எப்படி? முழு தகவலை இங்கு பார்ப்போம்.

தமிழ்நாட்டை சேர்ந்த நபர்..

சிங்கப்பூரில் வாழும் இந்த நபரின் பெயர், வைத்தியலிங்கம் முத்துக்குமார். தமிழகத்தை, சிங்கப்பூரில் தற்போது வசித்து வருகிறார்.

இவருக்கு 49 வயது ஆகிறது. இவர், 2007ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாட்டு பெண் ஒருவரை இந்தியாவில் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார்.

இவருக்கு, இப்போது 55 வயது ஆகிறது. பின்னர், சிங்கப்பூருக்கு வந்தவுடன் 2011ஆம் ஆண்டு முதல், தன்னுடன் வேலை பார்த்த சல்மா பீ அப்துல் ரசாக் என்கிற பெண்ணுடன் உறவில் இருந்திருக்கிறார்.

இந்த பெண்ணிற்கு தற்போது 43 வயது ஆகிறது. இவருக்கு திருமணம் ஆகி விட்டது என தெரிந்தே, சல்மா இவருடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு, கடந்த 2022ஆம் ஆண்டில் இஸ்லாமிய முறைப்படி நாகூரில் (இந்தியா) திருமணம் நடந்திருக்கிறது.

முதல் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கினார்..!

கடந்த 2023ஆம் ஆண்டு, முத்துக்குமார் தனது 2வது மனைவியுடன் தொடர்பில் இருக்கும் போதே முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

2023 செப்டம்பரில், முத்துக்குமாருக்கும் அவரது 2வது மனைவி சல்மாவிற்கும் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கிறது.

பிறந்த குழந்தையை, பிரசவ அறையில் இருந்து முத்துக்குமார் வெளியே கொண்டு வரும் போது, தன் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார். அந்த மருத்துவமனையில், அவரது முதல் மனைவி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறையில் அடைக்கப்பட்டார்..!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், முத்துக்குமார் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தில் நிரந்தர குடியேற்றத்திற்காக விண்ணப்பித்திருக்கிறார்.

அதில், முதல் மனைவியை ஆதரவாளராக பட்டியலிட்டு, தனக்கு வேறு திருமணங்கள் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விண்ணப்பம் அக்டோபர் மாதத்தில் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

இது, ஒரே சமயத்தில் முத்துக்குமார் 2 பேரை திருமணம் செய்திருப்பதை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது.

இந்த குற்றத்திற்காக இவருக்கு 3 மாதம்+3 வாரம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட்டு இருக்கிறது.

சிங்கப்பூர் விதியின் படி, இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமாம்.

அதே போல, இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.6.77 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டுமாம். இப்போது முத்துக்குமாரும், ஒரே நேரத்தில் இருவரை திருமணம் செய்த குற்றத்திற்காக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

 

Share.
Leave A Reply