இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரேகா. நடிகர் ஜெமினி கணேசனின் மகளான ரேகா 1980 காலக்கட்டங்களில் திரை உலகில் கொடிகட்டி பறந்தார்.
இந்நிலையில் 1985-ம் ஆண்டில் நடிகை ரேகாவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானும் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்தனர்.
கடற்கரையில் இருவரும் ஒன்றாக உலா வந்தனர். இதையடுத்து இருவரும் மிகவும் நெருங்கி பழகி வருவதாகவும், காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
ரேகாவின் தாயாரான புஷ்பவல்லிக்கு இம்ரான்கானை மிகவும் பிடிக்கும். இதனால் ரேகா குடும்பத்தில் ஒரு நபராகவே இம்ரான்கான் இருந்து வந்தார்.
இதையடுத்து ரேகாவுக்கும் இம்ரான்கானுக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக புஷ்பவல்லி டெல்லியில் பிரபல ஜோதிடர் நஜ்மீயிடம் ஜாதகம் பார்த்ததாகவும் கூறப்பட்டது.
தனது மகளுக்கு இம்ரான்கான் பொருத்தமானவராக இருப்பார் என புஷ்பவல்லி நம்பினார்.காதல் கிசுகிசுக்கள் ஜோடியாக சுற்றித் திரிந்தது. தாயாரின் சம்மதம் இருந்தாலும் ரேகா, இம்ரான்கான் விவகாரம் திருமணம் வரை செல்லவில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து சென்றனர். ஆனால் காதல் பற்றியோ, பிரிவு பற்றியோ ரேகாவும் சரி, இம்ரான்கானும் சரி ஒரு போதும் கருத்து சொல்லவில்லை. 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேகா இம்ரான்கானின் காதல் விவகாரம் தற்போது வெளியாகி வைரலை ஏற்படுத்தி உள்ளது.”,